Sunday, December 20, 2009

யோகம்

அன்பு உள்ளமே ..
  உன்னை மையப்படுத்தியே இந்த உலகம் உள்ளது ..இதை புரிந்து அனுபவிப்பதே யோகம். இன்றைய மனிதன் யோகா என்கிற ஒன்றுக்கு உடல் சார்ந்த கலை என்ற பொருள் கொள்கிறான் .
 தன்னை படைத்த ஒன்றுடன் ஒன்றுவதே யோகம்.தன்னை படைத்த ஒன்றை அறிய முற்படுவதற்கு சில வழி முறைகளை கையாள்வதற்கு யோகதிற்குள் எட்டு அங்கம் என பிரித்துள்ளார்கள் .அவை
௧,  இயமம்
௨,  நியமம்
௩, ஆசனம்
௪,  பிரணாயாமம்
௫, பிரிதியலங்காரம்
௬, தாரணை
௭, தியானம்
௮, சமாதி .
இயமம்
     இயல்பை அறிந்து ஒத்திசைவு கொள்ளுவது .ஆணாகவோ, பெண்ணாகவோ, இருந்து தன் உணர்வுகளை மதித்து பிறர் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, எல்லாரும் எல்லாமும் பெற்று இன்புற்றிருக்க தகுந்த முறையுடன் தன்னை நிர்வகிப்பது.
நியமம்
   தன்னை தன் ஒழுக்கத்தை எல்லைபடுத்துவது. தனக்கோ பிறருக்கோ இயற்கைக்கோ எதிராக செயல்படாமல் தகுந்த முறையுடன் தன்னை நிர்வகிப்பது.
ஆசனம் 
   உடல் அசைவுகளை தன்வசப்படுதுவது. உடலின் இயக்கத்தை ஒழுக்கப்படுதுவது. அதற்கான பயிற்சிகள் செய்வது .
பிரணாயாமம்
   எப்பொழுதும் நடந்துகொண்டு  இருக்கும் சுவாசத்தை தன்வசப்படுதுவது.மூச்சு காற்றை
முறையாக செய்து மனதின் ஓட்டத்தை ஒழுக்கப்படுதுவது.
பிரிதியலங்காரம்
   தன்னுணர்வுகளை உடல் முழுவதும் பரவ செய்து தன்னை இறைவுனர்வால் நிரப்பிக்கொள்வது. இது நெற்றிக்கண் விழிப்புக்குபின் செய்வது .
தாரணை
     கவனத்தை ஒரு குறிப்பிட்ட இடத்தில மையப்படுத்துவது. தனக்கு வேண்டிய இடத்தில தனது ஆற்றலை செலுத்துவது.
தியானம்
 கவனம் இன்றி இருப்பது. எண்ணமற்ற தன்மையில் நிலைப்பது .
சமாதி
ஒருக்கினைந்து  போவது.அமைதியல் கலப்பது. ஏகததுடன் இணைவது .
                           இதுவே  யோகம் எனப்படும். இன்று யோகா என்ற பெயரில் வெறும் ஆசனப் பயிற்சிகள் செய்யபடுகிறது.
                   உடல் நலம் காக்கவும், மனவளம் கூட்டவும்,  ஆசனப் பயிற்சிகள் அவசியம். அதிலும் கை கால்களை அளவுக்கு அதிகமாக வளைப்பது நல்லதல்ல. இயல்பான உடலின் ஆரோக்கியத் தன்மையும் கெடும்.
          அன்பு உள்ளமே கவனமாக இருங்கள்...


இதை விளக்கும் விதமாக அமைந்த திருமந்திரப் பாடல்

இயம நியமமே எண் இலா ஆதனம்
நயம் உறு பிரணா யாமம் பிரத்தி ஆகாரம்
சயமிகு தாரணை தியானம் சமாதி
அயம் உறும் அட்டாங்கம் ஆவது ஆமே.

No comments:

Post a Comment

Thank you for your valid opinion....