யோகக்குடில்

மதம் மறப்போம்!                                                                      மனிதம் !வளர்ப்போம்!
யோகக்குடில்

    மனம் நிறைந்த வணக்கம் !! 

            இந்தப்பக்கம் யோகக்குடிலின் செயல்பாடுகளைக் குறித்து விளக்க எழுதப்பட்டுள்ளது.......

௧, சத்சங்கம். 
௨, உபதேசம் மற்றும் ஆன்மீக பயிற்சிகள். 
௩, ஆனந்த வாழ்வு என்ற இரண்டு நாள் வகுப்பு.
௪, உடல் மற்றும் மனநலம் காக்கும் ஆலோசனைகள்.

         ௧, சத்சங்கம் .

          ஞாயிற்றுக்  கிழமைகளில் மாலை 6 மணி  முதல் 9 மணிவரை நடைபெறும் இதில் #தியானம்  #பயனுள்ள பாடல் #தேநீர்  #எதாவது ஒரு தலைப்பில் பேசுதல் என அமைந்திருக்கும். இது முற்றினும் இலவசமானது. யார்வேண்டுமானாலும் பங்கு பெறலாம்.
                 
            இது ஆன்மீக மற்றும் தன்னை அறியும் கலையாகிய யோகம் பயிலும் அன்பர்களுக்கு உதவும் பொருட்டு செய்யப்பட்டது. மேலும் மத பேதங்களைக் கடக்கவும், உண்மை அறிவதற்கும், ஆன்மீகக் கேள்விகளுக்கு விடை தேடவும் உதவுகிறது . 

                 சத்சங்கத்தில் எந்தவித பாகுபாடும் இன்றி எல்லாரும் கலந்துக் கொண்டு தன்னை வளர்த்துக் கொள்ளலாம். இது மதம், ஜாதி, இனம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கடந்தது. தமிழ் புரிந்துக் கொள்ளும் ஆற்றல் உள்ள அனைவரும் வரலாம்.

              கடவுள் மறுப்பாளர்கள் தனது உள்முக ஆற்றலை வளர்த்துக் கொள்ள இதை பயன்படுத்திக் கொள்ளலாம். மதப் பற்றாளர்கள் மதம் கடந்த சிந்தனையை பெறவும், மனிதர்களுக்குள் வேறுபாடுகளைக் களைய நினைப்பவர்கள் அதற்க்கான ஆழ்ந்த புரிதலை வளர்த்துக்கொள்ளவும் சத்சங்கம் பயனுள்ளதாய் அமையும்.

    கேள்வி பதில் உரையாடலும் உண்டு. உங்களுக்கு எழும் சந்தேகங்களை உடனுக்கு உடன் கேட்டு விடை பெறலாம்.  

     சத்சங்க பேச்சுக்களை காண கிழ்காணும் இணைப்பை சொடுக்கவும் ...                           


           சத்சங்கம் எட்டு வாரம் தொடந்து வருபவர்களுக்கு உபதேசம் மற்றும் ஆன்மீக பயிற்சிகள் இலவசமாய் வழங்கப்படும் .


 ௨,உபதேசம் மற்றும் ஆன்மீகப் பயிற்சிகள்.
        
        உபதேசம் என்பது உடலுக்கு துணையாக இருக்கும் ஒன்றைக் குறிப்பது. இது மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அது 

௧, மெய்ப்பொருள் உபதேசம் அல்லது திருவடி தீட்சை, 
௨, லிங்க உபதேசம், 
௩, பிரணவ மந்திரம் அல்லது பிரம்ம உபதேசம். எனப்படும்.
  
    புனிதம் கருதி வெளிப்படையாய் இன்றி மறைப்பொருளாய் போதிக்கப் படுகிறது. அனுபவத்திற்கு பின் இதை அடுத்தவருக்கு போதிப்பது நல்லது அதுவரை மறைமுகமாகவே பாதுகாக்கப் படுவது கட்டாயக் கடமையாகும்.

          இதைப்பற்றிய மேலும் தகவல்களுக்கு கிழ் காணும் இணைப்பை சொடுக்கவும் ....

             http://yogakudil.blogspot.in/2010/11/upadesam.html     
   

          மெய்ப்பொருளை  பல வார்த்தைகளில் விளக்க முயற்சிக்கிறது தமிழ். முருகன், கந்தன், கருமாரி, விநாயகன், வேலன், பார்வதி, பார்ப்பன், பறையன், முதலியன், என்ற பல வார்த்தைகள் ஒரே பொருளை சுட்டி விளக்குகிறது. இதை ஒருவர் விளக்க ஒருவர் உணர்வது நல்லது. கல்லை பூட்டி கடலில் பாய்ச்சினும் நல்ல துணையாய் நின்ற நமசிவாயமும் இந்த மெய்ப்பொருளே.     

            லிங்க உபதேசம் என்பது விதை முளைக்கும் பொழுது தோன்றும் வடிவமே ஒத்த ஒன்று நமக்குள் இருக்கிறது. அதை நினைப்பால் அணைத்தால் மரணத்தை தள்ளிப் படலாம். இதை விளக்கவே மார்கண்டேயன் கதை சொல்லப்பட்டு உள்ளது. 

               பிரணவ மந்திரம் என்பது இன்றும் திருச்செந்தூர் கோவில் மதில் சுவற்றில் ஓட்டை ஒன்றை ஏற்படுத்தி காது வைத்து கேட்க சொல்கிறார்கள். இது முருகன் சிவனுக்கு உபதேசித்ததாக கதை புனையப்பட்டு உள்ளது. 

           மேலும், 
௧, தக்கன் வேள்வி 
௨, ஞானக் குளியல் 
௩, மந்திர முயற்சி 
௪, உயிர் எழுத்து ஓதல் 
௫, யோகா நித்திரை 

            என்ற ஐந்து வித பயிற்சிகள் கற்றுத்தரப்படும். எட்டு சத்சங்கம் வர இயலாதவர்கள் பணம் ஒரு பொருட்டு இல்லை என்பவர்கள் பத்தாயிரம் ருபாய் கட்டணம் செலுத்தி உடனே கற்றுக் கொள்ளலாம். இதற்கு மூன்று மணி நேரம் தேவைப்படும். 
          
       ரகசியத்தைக் காக்கும் மனம் அவசியம். அனுபவத்திற்கு பின் உங்கள் விருப்பத்தில் வெளிப்படுத்தலாம். உபதேசத்தை அறிந்து இந்த பயிற்சிகளை செய்வதால் நாற்பது நாட்களுக்குள் நெற்றிக் கண் விழிப்பு நடைபெறும். அதன் பின்பு உங்களின் உள்தன்மைக்கு ஏற்ப புலனடக்கமும் நாதாமும் வசப்படும்.

             உடல் மன ஆரோக்கியம் வளர்ந்து அமைதியும் ஆனந்தமும் நினைத்த தன்மையில் இருக்கும்.  உபதேசம் மற்றும் பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் முன் அனுமதியுடன் காலத்தை நிர்ணயம் செய்துக் கொண்டு வரலாம். இலவசமாய் பெறுபவர்களுக்கு சத்சங்கத்திலேய அறிவிக்கப் பட்டு கற்றுத்தரப்படும். 
                   
     
௩, ஆனந்த வாழ்வு என்ற போதனை வகுப்பு.

          ஆனந்த வாழ்வு  என்பது ஒரு போதனை வகுப்பு . இது காலை 8 முதல் மாலை 8.30 வரை நடைபெறுகிறது. இதைப் பற்றிய விவரங்கள் அறிய கிழ் காணும் இணைப்பை சொடுக்கவும் ....

   http://yogakudil.blogspot.in/p/anantha-vazhvu.html


            ஒரு முழு நாள் நடைபெறும் இந்த வகுப்பிற்கு ஆயிரம் ருபாய் பயிற்சி கட்டணம். மதிய உணவும், காலை மாலை தேநீரும் வழங்கப்படும்.

          நான் யார் என்று துவங்கி எப்படி உலகம் தோன்றி இருக்கக் கூடும்? கடவுள் என்பது என்ன? எப்படி வாழ்வது? என்ற பலவித கேள்விகளை கேட்டு விடை அறிந்து மன அமைதிக்கும் ஆனந்தமாய் இருப்பதற்கும் அவசியமானது ஆழ்ந்த புரிதல் என்பதை உணர்த்துவது இந்த வகுப்பின் நோக்கமாகும். 

       தற்சமயம் இது சென்னையில் மட்டும் நடைபெறுகிறது. வகுப்புக்கு வரும் நபர்கள் காலை 7.50 வரவேண்டும். முடிந்தால் முன்னரே பதிவு செய்வது நல்லது.

         மன குழப்பங்களும் தேவையற்ற சலனமும் அழிந்து விடுதலை உணர்வைப் பெற்று ஆனந்தமாய் இருக்க வழி செய்யும். விருப்பமுள்ளவர்கள் வரலாம்.       ௪, உடல் மற்றும் மனநலம் காக்கும் ஆலோசனைகள்.

         குடும்ப சுழல், உடல் நலக் குறைவு, மன பாரம், மன அழுத்தம், மனம்விட்டு பேச ஏக்கம், இப்படி உள்ளவர்கள் மாலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை வார நாட்களில் வரலாம். 

         உங்களில் ஒருவனாய், உங்களுனைய நண்பனாய், உடன் பிறந்தவனாய் , உறவு பரட்டுபவனாய் உங்களின் வளர்ச்சிக்கு ஒருதுனையாய் இருக்க காத்திருக்கிறேன். 

     உங்களிடம் இருந்து நம்பிக்கை தவிர வேறு ஒன்றை எதிர்பார்க்காமல் உங்களுக்காய் காத்திருக்கிறேன். 

                                                            
 அடியேனை பயன்படுத்திக் கொள்ள தேவை உள்ளவர்களுக்கு கட்டளை இடுகிறேன் . உண்மை என்றும் உண்மையே.
                                                                  என்றும் என்றென்றும் அன்புடன் 
                                                                                       சிவயோகி