Monday, December 27, 2010

தமிழ்

மதம் மறப்போம்!                      மனிதம் வளர்ப்போம்!  
தமிழ் 
அன்பு உள்ளமே! 
                      தமிழ் என்பது ஒரு மொழி. மொழி என்பது  மனிதர்கள் எழுப்பும் ஓசைகளின் ஒழுக்கமுறையும் அதற்கான வரி வடிவமைப்பும் ஆகும். உலகில் அநேக மொழிகள் இருக்கின்றன.சில மொழிகளுக்கு வரிவடிவம் இல்லை. 
                      நாம் இங்கே தமிழ் மொழியின் தன்மைகளை அறிவோம்.தமிழ் மொழியின் வரி வடிவம் காலத்திற்கு காலம் மாறுபட்டு இருந்திருக்கிறது. ஆனால், ஓசை நயம் பெரிய  அளவில் மாற்றம் அடையவில்லை.    
                               மேலும்,தமிழ் மொழியின் ஓசை அமைப்புகள் பல மொழிகளுக்கு அடித்தளமாக இருக்கிறது. சுமார் நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் என்ற இலக்கண நூல் தமிழ் மொழியின் தனித்துவத்தை உணர்த்த உருவாக்கப்பட்டு இருக்கிறது.
                         வளமையும்,செழுமையும் நிறைந்த பல படைப்புகளை தன்னகத்தே கொண்ட தனிப்பொரும் மொழியாக இன்றும் சிறந்து விளங்குகிறது.கடவுள் அல்லது உண்மை பற்றிய தெளிவான முடிவை அறிந்த உன்னதமனவர்களால் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. எனவே தான் தமிழ் மொழியை ஞான மொழி என்று அழைக்கிறார்கள்.
                           மனித உடம்பில் உயிர் இருப்பது போல் மெய் எழுத்துக்குள் உயிர் எழுத்தை பொருத்தி உள்ளார்கள். உயிரின் தன்மைகளை உணர்த்தவே உயிர் எழுத்துக்களையும்,உடலின் பலதரப்பட்ட அமைப்பு போல் மெய் எழுத்துக்களையும் வடிவமைத்து உள்ளார்கள்.
                             அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள, என்று உயிர் எழுத்துகள் பனிரெண்டு இருப்பினும் ஒலிப்பான் என்று பார்த்தால் ஏழு மட்டுமே. இது ஏழு முக்கிய சுரப்பிகளுக்கு ஆதரமாக உள்ளது.      
                                             இதை கிழிருந்து மேலாக உச்சரித்து நெற்றிக்கண்ணை திறக்கலாம்.மேலும் எல்லா மெய் எழுத்துக்களையும் அதன் உயிருடன் இணைத்து உச்சரித்து ஞானம் அடையலாம்.  
              பிச்சை புகினும் கற்கை நன்றே, ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்றே கூறியதின் உண்மை பொருள் இதுதான்.
    #  மூலாதாரம் - அ, ஆ மற்றும் அதன் உடன்படும் மை எழுத்துக்கள்.

    #  சுவதிச்டணம் -இ,ஈ மற்றும் அதன் உடன்படும் மை எழுத்துக்கள்.

    #  மணிபூரகம்-உ,ஊ மற்றும் அதன் உடன்படும் மை எழுத்துக்கள்.

    #  அனாகதம் -எ,ஏ மற்றும் அதன் உடன்படும் மை எழுத்துக்கள்.

    #  விசுத்தி -ஐ மற்றும் அதன் உடன்படும் மை எழுத்துக்கள்.

    #  அங்கினை -ஒ,ஓ மற்றும் அதன் உடன்படும் மை எழுத்துக்கள்.

    #  உச்சி -ஒள மற்றும் அதன் உடன்படும் மை எழுத்துக்கள்.
  
 ஆயுதமும் மெய்யும் புருவ பூட்டின் திறவுகோள்கள்......