சரி யா பார்

உள்ளதை உள்ளபடி பார்ப்போம்.........

பட்டினத்தார்

        இறை தேடல் என்பது சமரசம் செய்துக்கொள்ள முடியாத வாழ்வியல் சிக்களால் உண்டாவது இல்லை. ஆனால், இவருக்கு அப்படித்தான் உண்டானது. வசதிப் படைத்தவர்களை வரலாறு, தன்வசம் செய்துகொள்வதில் தயக்கம் காட்டுவது இல்லை. செல்வந்தனின் துறவு என்றால் சொல்ல வேண்டியது இல்லை. இயல்புக்கு மாறினால் அதை கவனிப்பதை மனிதன் காலம் தோறும் செய்கிறான்.
       
         ஆணவம் சொல்வந்தர்களின் உரிமைப் பொருள், ஆனால் யாரோ ஒரு ஏழையிடம் செல்லாததால் அவமானத்தில் துறவு கொண்டு தன்னை உயர்த்திக் காட்டிக் கொண்டவராகவே பட்டினத்து திருவெண்காடரை நான் பார்க்கிறேன்.

        இவரது படைப்புகள் இறை தேடல் உள்ளவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. வாழ்க்கையை புறக்கணிக்க தூண்டும் விதத்தில் பல பாடல்கள் இருப்பினும், யோக சாதனைக்கு சிறந்த துணையாக நிறைய பாடல்கள் இருக்கவே செய்கிறது.

         இவர், குருவை சந்தித்து உபதேசம் அறிந்து யோக பயிற்சிகள் செய்துள்ளார். ஆனால், குருவைப் பற்றிய குறிப்புகளை தரவில்லை. உபதேசப்பொருள் மறைத்து மதிப்பளித்து பொற்றப்பட வேண்டும் என்பதில் கவனமுடன் இருந்திருக்கிறார்.

          இவரது பாடல்களின் நிமித்தம் அளவுகடந்த குடும்பப் பற்றை விலக்கி இறைப் பற்றை வளர்த்துக்கொள்ள முடியும். அவரது முடிந்த முடிவு மெய்யன்பே இறை இடம் சேர்க்கும். அதறக்கான பாடல்.

 திருவிடைமருதூர்

காடே திருந்தென்ன? காற்றே புசித்தென்ன? கந்தைகற்றி
யோடே யெடுத்தென்ன? உள்ளன்பி லாதவ ரோங்குவிண்ணோர்
நாடே யிடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
வீடே யிருப்பனு மெய்ஞ்ஞான வீட்டின்ப மேவுவரே. 

விளக்கம்.

தனிமை நாடி காட்டில் திரிந்தால் என்ன? காற்றை மட்டுமே புசித்து வாழ்ந்தால் என்ன? வீணான துணியை மட்டுமே சுற்றிக்கொண்டால் என்ன? ஓடு எடுத்து பிச்சை பெற்றால் என்ன? உள்ளன்பு இல்லாதவர் இங்கு விண்ணோர் இல்லை. நாட்டில் இருப்பினும் மாறுதல் இல்லா ஈசன் மேல் மெய்யன்புக்கொண்டு பெண்ணுடன் வீட்டில் இருந்தாலும் மெய்ஞான வீட்டை அடைவார்கள்.

          இத்தகைய தெளிவே அவரது படைப்புகளை பாதுகாக்கவும், படித்து மகிழவும், அடுத்தவருக்கு விளக்கவும் துண்டுகிறது.

அவரது யோக சாதனை விளக்க பாடல்கள்.
         
வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்கு
எட்டாத புட்பம் இறையாத தீர்த்தம் இனி முடிந்து
கட்டாத லிங்கம் கருதாத நெஞ்சம் - கருத்தினுள்ளே
முட்டாத பூசையன்றோ குருநாதன் மொழிந்ததுவே.

2 comments:

Thank you for your valid opinion....