Monday, December 27, 2010

தமிழ்

மதம் மறப்போம்!                      மனிதம் வளர்ப்போம்!  
தமிழ் 
அன்பு உள்ளமே! 
                      தமிழ் என்பது ஒரு மொழி. மொழி என்பது  மனிதர்கள் எழுப்பும் ஓசைகளின் ஒழுக்கமுறையும் அதற்கான வரி வடிவமைப்பும் ஆகும். உலகில் அநேக மொழிகள் இருக்கின்றன.சில மொழிகளுக்கு வரிவடிவம் இல்லை. 
                      நாம் இங்கே தமிழ் மொழியின் தன்மைகளை அறிவோம்.தமிழ் மொழியின் வரி வடிவம் காலத்திற்கு காலம் மாறுபட்டு இருந்திருக்கிறது. ஆனால், ஓசை நயம் பெரிய  அளவில் மாற்றம் அடையவில்லை.    
                               மேலும்,தமிழ் மொழியின் ஓசை அமைப்புகள் பல மொழிகளுக்கு அடித்தளமாக இருக்கிறது. சுமார் நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் என்ற இலக்கண நூல் தமிழ் மொழியின் தனித்துவத்தை உணர்த்த உருவாக்கப்பட்டு இருக்கிறது.
                         வளமையும்,செழுமையும் நிறைந்த பல படைப்புகளை தன்னகத்தே கொண்ட தனிப்பொரும் மொழியாக இன்றும் சிறந்து விளங்குகிறது.கடவுள் அல்லது உண்மை பற்றிய தெளிவான முடிவை அறிந்த உன்னதமனவர்களால் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. எனவே தான் தமிழ் மொழியை ஞான மொழி என்று அழைக்கிறார்கள்.
                           மனித உடம்பில் உயிர் இருப்பது போல் மெய் எழுத்துக்குள் உயிர் எழுத்தை பொருத்தி உள்ளார்கள். உயிரின் தன்மைகளை உணர்த்தவே உயிர் எழுத்துக்களையும்,உடலின் பலதரப்பட்ட அமைப்பு போல் மெய் எழுத்துக்களையும் வடிவமைத்து உள்ளார்கள்.
                             அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள, என்று உயிர் எழுத்துகள் பனிரெண்டு இருப்பினும் ஒலிப்பான் என்று பார்த்தால் ஏழு மட்டுமே. இது ஏழு முக்கிய சுரப்பிகளுக்கு ஆதரமாக உள்ளது.      
                                             இதை கிழிருந்து மேலாக உச்சரித்து நெற்றிக்கண்ணை திறக்கலாம்.மேலும் எல்லா மெய் எழுத்துக்களையும் அதன் உயிருடன் இணைத்து உச்சரித்து ஞானம் அடையலாம்.  
              பிச்சை புகினும் கற்கை நன்றே, ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்றே கூறியதின் உண்மை பொருள் இதுதான்.
    #  மூலாதாரம் - அ, ஆ மற்றும் அதன் உடன்படும் மை எழுத்துக்கள்.

    #  சுவதிச்டணம் -இ,ஈ மற்றும் அதன் உடன்படும் மை எழுத்துக்கள்.

    #  மணிபூரகம்-உ,ஊ மற்றும் அதன் உடன்படும் மை எழுத்துக்கள்.

    #  அனாகதம் -எ,ஏ மற்றும் அதன் உடன்படும் மை எழுத்துக்கள்.

    #  விசுத்தி -ஐ மற்றும் அதன் உடன்படும் மை எழுத்துக்கள்.

    #  அங்கினை -ஒ,ஓ மற்றும் அதன் உடன்படும் மை எழுத்துக்கள்.

    #  உச்சி -ஒள மற்றும் அதன் உடன்படும் மை எழுத்துக்கள்.
  
 ஆயுதமும் மெய்யும் புருவ பூட்டின் திறவுகோள்கள்......

Thursday, December 23, 2010

கடவுள்

மதம் மறப்போம்!                        மனிதம் வளர்ப்போம்!  
 கடவுள் 
அன்பு உள்ளேமே!
                  கடவுள் என்ற வார்த்தை பல பொருள் தருவதாக இருக்கிறது.கடம் என்றால் உடம்பு என்று பொருள். உள் என்றால் உள்ளே என்று பொருள்.கடவுள் என்றால் கடத்துள் இருக்கும் ஒன்று என்றும் பொருள் கொள்ளலாம்.கடவுள் என்பது எல்லா கடதுள்ளும் இருக்கிறது. எனவே தான் அகிலத்தையும் ஆளும் ஒன்றினை கடவுள் என்று தமிழ் கூறும் நல்லுலகம் அடையாளப்படுத்தி உள்ளது.       
                       கடவுள் என்ற ஒன்றுக்கு ஆண்டவன், கர்த்தர், பரமபிதா, இறைவன் என்று ஆண்பால் பொதுப் பெயரிலும்,மாதா,உலக நாயகி என்று பெண்பால் பொதுப் பெயரிலும்,அழைத்தாலும் உண்மையில் கடவுள் என்பது ஆணோ பெண்ணோ இல்லை. எனவே தான் கடவுள் என்ற வார்த்தை பால் கடந்த தன்மையுடன் இருக்கிறது.       
                        கடவுள் இருக்கிறது என்பதே விவாதப் பொருளாக இன்று மாறிவிடும் அளவிற்கு மதங்கள் செயல்பட்டு இருக்கிறது.நான் இருக்கிறேன் என்றாலே எனக்குள் எதோ ஒன்று இருக்கிறது என்றுதான் அர்த்தம்.நான் இருப்பதற்கு அடிப்படையான காரணமே கடவுள் தான்.
                        கடவுளின் பெயரால் அனேக மதங்களை  மனிதன் ஏற்படுத்தியுள்ளதால் மனிதனுக்கு கடவுள் என்றால் மதமும் அதன் சடங்கு முறைகளும் கவனத்தில் வருகிறது.மனிதன் தன இனத்தை ஒழுக்க நெறிகளுக்கு உட்படுத்த கடவுளின் பெயரால் சில சடங்கு முறைகளை தந்து அதை கடைபிடிக்க கட்டாயப் படித்தியுள்ளன்.
                        மேலும்,கடவுளின் அசல் தன்மையை அறியமேலேயே அதற்கு வடிவம் பல தந்துள்ளான்.எனவேதான் இன்றைய அறிவு சார்ந்த மனிதன் கடவுளை புரிந்துகொள்ள முடிவதில்லை.
                        பொதுவாக மனிதர்கள் அறிவு சார்ந்து இருப்பதில்லை அறிவு சார்ந்த மனிதர்களையே நம்பி  இருக்கிறார்கள். இதன் பொருட்டே கடவுள் மறுப்பாளர்களையோ, அல்லது மதவாதிகளையோ மக்கள் நம்பி பின்தொடர்கிறார்கள்.  
                         உண்மையில் அறிவு முழுமை பெற்ற மனிதன் கடவுளை அறிந்துகொள்ள முடியும். அல்லது முழுமை பெற்ற மனிதன் கடவுளை சரியாக விளக்க முடியும். ஆயினும், தனக்கு தானே அறியாவிடின் சரியான ஒன்றை அறிந்ததாகது. ஆனால், ஒவ்வொரு மனிதனும் தன்னை தனது அறிவை சரி என்றே உணர்கிறான்.       
                          சரியாக கடவுளை உணர்துகொள்ள, கடவுளை உணர்த்துகொண்ட மனிதனின் வழிகாட்டுதலும் சுய முயற்சியும் அவசியம்.
                         கடவுள் உங்களுக்குள் இருக்கும் உன்னதம் நிறைந்த அற்புதம். அதை அனுபவித்துக்கொண்டு இருப்பதும் அதே சமயத்தில் அதை புரிந்துக்கொண்டு ஏற்பதும், மறுப்பதும் உங்களின் தனிப்பட்ட விருப்பம்.        
       

Tuesday, December 21, 2010

கொண்டாட்ட பாடல்கள்

  பாடல் - ௫ 
உடல் நடுங்க நடுங்க நடுங்க 
உயீர் உற்றெடுத்து பெருக 
--------------௨ 


நான் பாடும் பாடல் உனக்கு 
பலனாவாய் என்றும் எனக்கு 
--------------௨
                                                                      உடல் 
காலம் மாறும் மாறும் -- என் 
கற்பனை எல்லாம்  தீரும்
நேரம் இதுவே நேரம் -- உன்னை 
நினைத்து உருகும் நேரம் 
-------------௨
                                                                       உடல் 
தேவை இல்லை எனக்கு -- என் 
ஆசை ஓய்ந்தது அதற்கு 
இருப்பது சுகமே எனக்கு -- அதை 
எண்ணி மகிழ்வேன் அதற்கு 
--------------௨
                                                                         உடல்
இன்பம் எங்கும் இருக்கு --எனை 
மறந்து மகிழ்வேன் அதற்கு 
உந்தன் அருளே எனக்கு --அதை 
உணரும் பொழுது எனக்கு 
---------------௨
                                                                            உடல்  

கொண்டாட்ட பாடல்கள்

பாடல் -௪
பழுநீ   பழுநீ   பழுநீ   பழுநீ 
பழுநீ தான் அம்மா !

பழுநீ   பழுநீ   பழுநீ   பழுநீ 
பழுநீ தான் அப்பா  !


மாம்பழம் நீதான் 
மாதுளை நீதான் 
கொய்ய  கனி நீதான் 
--------௨
                                                               பழுநீ
பலாபழம் நீதான் 
விளாம்பழம் நீதான் 
நெல்லிக்கனி நீதான் 
                                                        ---------௨
                                                                    பழுநீ
வாழையும் நீதான் 
பனையும் நீதான் 
தென்னையும் நீயே  தான் 
                                                   ----------௨
                                                                      பழுநீ
சீத்தாபழம் நீதான் 
கோவைபழம் நீதான் 
நாவல் கனி நீயே தான் 
                                                        --------௨
                                                                         பழுநீ