கேள்வியும் பதிலும்

உங்கள் கேள்விகளை இங்கே பதிக்கவும்...


குரு - விளக்கவும்.

திரு- ஜெயராமநாதன், திரு - இராமலிங்கம்,  திருமதி - ஜெயந்தி ரங்கநாதன்


குரு  

அன்பு உள்ளங்களே!
       
            இருட்டறையில் ஏற்றப்படும் மெழுகுவர்த்தி போன்றது குரு.... குரு ஒரு மனிதனாக அல்லது ஏனைய மற்ற பொருளாக இருக்கலாம். நவீன காலத்தில் குரு என்பவர் தன்னை தனது நிலையை உயர்வான அலங்காரத்தால் அலங்கரித்து கொண்டு மக்களை மாறாத மயக்கத்தில் வைப்பவரகவே இருக்கிறார்கள்.
   
          மனிதனுக்கு மட்டுமே குரு அவசியம். காரணம், மனிதன் இயல்பான அறிவுடன் அணைத்து செயல்களையும் செய்ய முடிந்தவன் இல்லை. மேலும் அவனால் அடுத்தவருடன் உறவாட மொழி மற்றும் சடுங்கு முறைகள் பல நடைமுறை செய்யப்பட்டு உள்ளது .
    
          ஒருவரின் அறியாமையை  போக்கும் ஒருவரே குரு. அதே சமயத்தில் அவருக்கு எல்லாம் தெரியும் என்பது சாத்தியம் இல்லை. பலதரப்பட்ட கோணமுடன் பல வகைகளில் வாழ்தலின் அம்சம் இருப்பதால் எல்லா வகைகளிலும் ஒருவர் ஒருவருக்கு உதவ முடியாது. குருவும் எதாவது ஒரு வகையில் அறியாமையுடன் இருக்க வைப்புகள் அதிகம்.
     
             நமக்கு எதைக் குறித்து போதிய தெளிவு இல்லையோ அதை குறித்து நமக்கு போதிக்கும் ஒருவர் குரு. ஆனால் அதை குறித்த அரை குறை அறிவுடன் அவர் இருக்கிறார் என்றால் நாமும் போதிய தெளிவை அவரால் அடைய முடிவது இல்லை. எனவே,உண்மையான அறிவுத் தெளிவு பெற்ற ஒருவரை குருவாக அடைவது அவசியம்.      
     
           தனது புரிதலை அடுத்தவருக்கு உரிமையாக்கி தருபவரே குரு.  குரு என்பது ஒரு வேடமோ, சடங்கோ,அலங்காரமோ, போதனையோ, விளம்பரமோ இல்லை.
       
        எல்லாம் அறிந்தவர் யாரும் இல்லை, எதுவும் அறியாதவர் யாரும் இல்லை. எனவே, குரு அனைத்தும் அறிந்தவராகவோ, சிடர் எதுவும் அறியாதவரகவோ இருப்பதற்கு வாய்ப்பு இல்லை.   
             
          இன்றைய உலகில் பலதரப்பட்ட துறைகள் வந்தவண்ணம் உள்ளது. புதிய கண்டுபிடுப்புகள், புதிய கருவிகள் என்று நித்தம் புதுமைகள் பிறந்தவண்ணம் உள்ளன. ஆனால் அவைகள் மட்டும் நிறைவான வாழ்வை தர முடியாது. எனவே உலக இயக்கத்திற்கு அடிப்படையான காரணம் அறிந்து இன்புறுவது மனிதனுக்கு நல்லது.         
           
          அவ்வகையில் தன்னை அறிந்து தனக்கு மூலம் எது என்பதை அறிந்து அதை அறியும் கலை அறிந்து போதிக்கும் ஒருவரை குரு என்பது சரியானதாக  இருக்கும். உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள். yogakudil@gmail.com