Thursday, July 14, 2011

இயமம்

கடவுள் அறிய அடிப்படை தேவைகள்
(இயமம்)
மதம் மறப்போம்!                                               மனிதம் வளர்ப்போம்!
அன்புள்ளங்களே!
            மனிதர்களாகிய நாம் கடவுளை அறிய முடியும்,அப்படி அறிந்தவர்கள் நமக்கு அறிய நூல்களை தந்துள்ளார்கள், அதில் திருமந்திரம், பதஞ்சலி யோகா சூத்திரம், போன்ற நூல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை, கடவுளை அடைவதற்கு யோகம் என்று பெயர் தந்துள்ளார்கள்.யோகம் பற்றிய தகவல்கள் கிழே உள்ளது. 
              இங்கே,முதல் நிலையாக கருதும் இயமம் பற்றி பார்போம்.நாம் வெறும் நூல் அறிவோடு இல்லாமல்,அதை அனுபவமாக மாற்றுவோம்,அடியேன் யோகா அனுபவன் என்பதால் எனது சுயம் எப்படி என்னால் அறியப்பட்டதோ அப்படி நீங்களும் அறிய முடியும் என்ற வகையில் அடிப்படை தேவைகளை பட்டியல் இடுகிறேன்...
                ஒரு யோகா சாதனை செய்தவன் யோகி,அவனை ஞானி என்பது தமிழ் மரபு, முன்னோர் தமிழ் நூல்கள்  பெரும் பகுதி ஞானிகளால்  செயப்பட்டது. அவ்வகையில் அவ்வையார் மனிதன் கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் வேண்டும் என்றும், தானமும் தவமும் செய்தல் வேண்டும் என்றும், கல்வியும்  ஞானமும் வேண்டும் என்றும்,இவைகள் பெற்றுவிட்டால் வானவர் நாடு என்ற யோகவீடு திறக்கும் என்பார்.   
                உடல் தகுதி, உள்ள தகுதி, உள்ளத்தின் கண் வீற்றிருக்கும் அறிவு தகுதி, இவைகளே ஒரு யோகியை உருவாக்கும். யோகா தந்திரம் தந்த திருமூலரும் இக்கருத்தை ஒட்டியே நூல் தந்துள்ளார். எனினும், உடல் தகுதியை அவ்வையாரை போல் சொல்லவில்லை. இதை கடந்து மனிதன் கடைபிடிக்கவேண்டிய வழிகளையும் செயல் முறைகளையும்  விளக்கமாக  மூவாயிரம் பாடல் வழியே பிரித்து தந்துள்ளார்.        
      திருவள்ளுவரும் தனது திருக்குறளில் வாழ்வுக்கு இலக்கணம் தரும் விதமாக இறைவனை அடைவது, பிறவி கடலை கடப்பது, புலால் மறந்து இருப்பது, என யோகத்தினை வலியுறுத்துகிறார்.
        யோகா என்பது உடல் பயிற்சியாக கருதக்கூடாது, அது உடலை கொண்டு இறைவனை அடைவது.  
௧, உடல் தகுதியே முதல் அடிப்படை தேவை,
  உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும், பிறப்பிலேயே பிழை இருப்பின் அதை நீங்க வேண்டும், மூலாதாரத்திலிருந்து உச்சி வரை செல்லும் நாடி ஒழுக்கமுடன் கூனனாக பிறந்த அன்பு உள்ளத்திற்கு இருக்காது. எனவேதான், கூன் இன்றி இருப்பது அவசியம், ஒழுக்கமுடன் பிறந்தவர்கள் தனது முதுகை நேராக வைத்துக்கொள்வது அவசியம்,  அதற்கான பயிற்சிகளை யோகா ஆசனம் என்பர்.
 உடலை ஆரோக்யமாக வைக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும், இங்கே சிலர் தவறாக எண்ணக்கூடும், சைவம், அசைவம் என்று இரண்டுவகை உணவு இருப்பதால் சைவம் தான் சிறந்தது, அல்லது அசைவம் தான் சிறந்தது என்பதில்லை, அதிகம் புளித்த தயிரோ, இரவு  வைத்த இறைச்சியோ, அதாவது கேட்டுபோகாத உணவை உட்கொள்ள வேண்டும்.              
   உடலை விட அறிவாளி யாரும் கிடையாது, அச்சம் கொள்ள தேவை இல்லை. அசைவம் உண்பதால் கடவுளை அறியமுடியாது என்று யாராவது கூறி இருந்தால் அது அவரது புரிதல். திருமூலரும் தனது இருநூற்று எழுபத்து   இரண்டாம் பாடலில், இறைச்சி அறுத்து பொன் போல் வறுத்து அன்போடு அகம் குழைவாருக்கு அல்லாமல் என்போல் மணியை எய்த  ஒண்ணாது. 
  என்பே விறகா இறைச்சி அறித்திட்டுப் 
  பொன்போல் கனலில் பொரிய வறுப்பினும் 
  அன்போடு உருகி அகம் குழைவாருக்கு அன்றி 
  என்போல் மணியினை எய்த ஒண்ணாதே.
 என்று கூறியுள்ளதற்கு காரணம் இறைச்சி ஆன்மிகத்திற்கு தடை இல்லை என்று வலியுறுத்தவே, புலால் என்பது புலன்களின் பன்மை பெயர்,  புலன்களின் மேல் இச்சை கொண்டு அது காட்டும் வழி செல்பவர் மல்லாக தள்ளி மறித்து வைக்கப்படுவர். இதை இறைச்சி உண்பவர் என்று அர்த்தம் கொள்ளகூடாது, அப்படி அர்த்தம் கொண்டால் எத்தனையோ அன்பு உள்ளங்கள் இறைச்சி உண்ணாமல் இருக்கிறார்கள், அவர்களை மல்லாக தள்ளி புதைக்காமல் இல்லை.இதற்கான திருமந்திர பாடல் 
  பொல்லாப் புலாலை நுகரும் புலையரை 
  எல்லாருங் காண இயமன்தன் தூதுவன் 
  செல்லகப் பற்றித் தீவாய் நரகத்தின் 
  மல்லாக்க தள்ளி மறித்து வைப்பாரே -௧௯௯
புலன்களை நுகருவதே ஆன்மிக தடை புலன்களை தன்வசம் செய்வதே யோகத்திற்கு வழி, இதை வலியுறித்தியே , திருவள்ளுவரும் 
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி 
எல்லா உயிரும் தொழும்.
 கொள்ளாமலும்,புலாலை மறுத்தும் இருந்தால் அதாவது தவநிலையில் இருந்தால் எல்லா உயிரும் தொழும்...     
உடலை நன்கு பேணுவதால் உடலுக்குள் இருக்கும் உத்தமனை  காணலாம்.
௨, உள்ளத்தகுதி 
 உள்ளம் என்பது மனதை குறிப்பது, மனம் செம்மை செய்வது மனிதனின் கடமை, மனதை பலதரப்பட்ட கருத்துக்களால் நாம் நிரப்புவது இயல்பானது. அதை விடுத்து மனதை எண்ணங்கள் அற்ற நிலைக்கு உயர்த்தவேண்டும். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை 
       என்ற குறளுக்கு இணங்க எல்லாரும் வாழ்வதற்கு இடம் அளித்து தமது திறமையால் அடுத்தவர் இன்புறும் வழியை காட்டி, தனது வேலைகளை சரியாக செய்தல் வேண்டும், உள்ளத்தை செம்மை செய்வதற்கு அதாவது  மனதை எண்ணமற்ற தன்மைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
௩, அறிவு தகுதி 
 அனைத்திற்கும் ஆதாரம் உண்டு, அதை அடைவது என் பணி, என்ற நோக்கில் உள்ள தூய்மையுடன் இருப்பதே தியானம்,அதனால் அடைவது யோகம்....
   எல்லாரும் எல்லாமும் பெற்று இன்பமாய் வாழ இறைமை அருள்வதாக ..