Wednesday, September 23, 2009

நல்வரவு

அன்பு உள்ளங்களே !
           உங்கள் அனைவரையும் அன்புடன் யோகக்குடிலுக்கு அனுபவம் அடைவதற்கு அழைக்கின்றேன் .
           ஆன்மிகம் என்பது சடங்கு முறை அல்ல. தன்னை தான் அறிந்து மீண்டும் பிறவா நிலை அடைவது. அத்தகைய அனுபவம் அடைவதற்கு அடியேன் சில ரகசிய முறைகள் வைத்து இருக்கிறேன். அதாவது உபதேசம் என்று அதை அழைக்கலாம்.
   எப்படி காம இச்சைகளை ரகசியமாக அனுபவிக்கின்றோமோ அது போலவே உபதேசமும் மறை பொருளாகவே கையாளப்படுகிறது .
         உபதேசம் அறிவதால் நெற்றிக்கண் விழிப்பு பெறுகிறது. இது உபதேசம் அறிந்த நாற்பது நாட்களுக்குள் நடைபெறுகிறது. மேலும் நாத ஒலி கேட்கிறது .
        இந்த நாத ஒலியைதான் ஓம் என்றும், ஆமேன் என்றும், ஹு என்றும் பலவேறாக அழைக்கிறார்கள் .இதை முன்னிருத்திதான் வள்ளுவர் 

       செல்வத்துள் செல்வம் செவிசெல்வெம், அச்செல்வம் 
       செல்வத்துள் எல்லாம் தலை.           ௪௧௧-திருக்குறள் .

 என்று குறிப்பிடுகிறார் .
     அடக்கினும்  அடக்கொணாத அம்பலத்தின் ஊடுபோய் 
     அடக்கினும்  அடக்கொணாத அன்பெருக்கும் ஒன்றுளே
     கிடக்கினும் இருக்கினும் கிலேசம் வந்து இருக்கினும் 
     நடக்கினும் இடைவிடாத நாதசங் கொலிக்குமே.
என்று எனது மனசிக குரு சிவவாக்கியர் தனது பாடல் வழியாக தந்துள்ளார் .  


Best regards,
Sivayogi
tel.:+919444190205
fax:
yogakudil@gmail.com
http://www.yogakudil.blogspot.com

சிவயோகி

          நான் ஒரு சிவயோகி ஞானமடைந்த நாள் 17/1/2002, அடியேன் ஒரு யோககுடில் அமைத்து வரும் அன்பர்களுக்கு இன்ப அனுபவம் தர காத்து இருக்கிறேன்.விருப்பம் உள்ள நண்பர்கள் அடியேனை அணுகலாம்
          அடியேன் பிறந்தது 17/5/1968, தாயார் -- பத்மாவதி, தந்தை --ஆறுமுகம் என்ற கங்காதரன் . நான் பிறந்த ஊர் புத்தகரம் என்ற சிறிய கிராமம் ,அதின் அருகில் உள்ள மாதனாங்குப்பம் கிராமத்தில் அரசினர் 
ஆரம்ப பள்ளி இல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன் .ஆறு முதல் பத்து வரை சிங்காரம் பிள்ளை மேல்  நிலைப் பல்ளியல் படித்தேன் . அதன் பின் படித்தது எல்லாம் தனியாகவே இருந்தது . வானிகவியல் மேல் நிலைப் படிப்பு, முது கலை தமிழ், உளவியல் ,சமூகவியல் பாடங்களை சென்னை பல்கலை கழகத்தில் படித்தேன் .


                நான் படித்ததிலேய சிவவாக்கியம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது. அதன் பால் ஈடுபாடுக் கொண்டு இறைதேடலில் ஆர்வம் கொண்டேன். அவ்வப்போது  தியானம் என்று எதையாவது செய்வது வழக்கம். ஒன்பாதம் வகுப்பில் தியானம் செய்தால் நன்கு மனப்பட அறிவு வளரும் என்று தொண்டு நிறுவனம் ஒன்று அமைதியாக அமர்ந்து ஒரு பறவையின் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கும்படி போதித்தார்கள். ஆனால் சிவவாக்கியம் அத்தனையும் புரட்டிப் போட்டது மட்டுமின்றி  தியானம்  பயற்சிகளை விளக்கியும் இருந்தது. முறையே காலையில் நான்கு மணிக்கு எழுந்து தியானம் உடல் பயிற்சி என்று செய்வதை வாடிக்கையாக்கிக் கொண்டேன் .
             5/2/1995 இல் ஜெயகுமாரி யை திருமணம் செய்து ஆதித்ய விஷ்ணு தாஸ்,14/11/1995.,பத்ம பிரிய தர்ஷனி 17/10/1999 .,என்ற குழந்தைகளை பெற்றேன் .
        யோகம் என்பது தனக்குள் தன்னை அடைவது . நான் என்ற மனம் தனது எண்ண  விகாரங்களை அழித்து அமைதியுறும் சூழலே யோகம் என்பது. அப்படி தன்னை சும்மா இருக்க செய்து இறையனுபவம் பெற்றாதால் என்னை யோகி என்று உணர்ந்தேன். சிவா எனது இயற் பெயராக இருந்ததால் சிவயோகி என்று புனைந்து கொண்டேன் . 
     எல்லா மனிதரும் யோகியாகலாம். யோகம் என்பது தனி மனித உரிமைப் பொருள் இல்லை . ஆனால், அது தனிமனித சாதனை . என்னைப் போலவே எல்லாரும் சாதிக்க வேண்டும் என்பது எனது ஆவல்.    
            யோகா சாதனை செய்வதற்கு அவசியாமானது சுய ஆர்வமும் தனக்கு தானே உண்மையாய் இருத்தலே . அடுத்தது உபதேசம் அறிந்து முறையான பயிற்சிகள் செய்வது  அவசியம் ..அப்படி உபதேசம் அறிய ஆவல் கொண்டாவர்கள்  என்னை அணுகலாம் .....நன்றியுடன் .
cell - +91 9444190205,
Email - yogakudil@gmail.com.
Address.
Yogakudil,
8, Annai Indra Nagar, Puthagaram,
Kolathur post,
Chennai,Tamil Nadu,
India.
Pin-600099.
www.yogakudil.webs.com