Thursday, July 14, 2011

இயமம்

கடவுள் அறிய அடிப்படை தேவைகள்
(இயமம்)
மதம் மறப்போம்!                                               மனிதம் வளர்ப்போம்!
அன்புள்ளங்களே!
            மனிதர்களாகிய நாம் கடவுளை அறிய முடியும்,அப்படி அறிந்தவர்கள் நமக்கு அறிய நூல்களை தந்துள்ளார்கள், அதில் திருமந்திரம், பதஞ்சலி யோகா சூத்திரம், போன்ற நூல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை, கடவுளை அடைவதற்கு யோகம் என்று பெயர் தந்துள்ளார்கள்.யோகம் பற்றிய தகவல்கள் கிழே உள்ளது. 
              இங்கே,முதல் நிலையாக கருதும் இயமம் பற்றி பார்போம்.நாம் வெறும் நூல் அறிவோடு இல்லாமல்,அதை அனுபவமாக மாற்றுவோம்,அடியேன் யோகா அனுபவன் என்பதால் எனது சுயம் எப்படி என்னால் அறியப்பட்டதோ அப்படி நீங்களும் அறிய முடியும் என்ற வகையில் அடிப்படை தேவைகளை பட்டியல் இடுகிறேன்...
                ஒரு யோகா சாதனை செய்தவன் யோகி,அவனை ஞானி என்பது தமிழ் மரபு, முன்னோர் தமிழ் நூல்கள்  பெரும் பகுதி ஞானிகளால்  செயப்பட்டது. அவ்வகையில் அவ்வையார் மனிதன் கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் வேண்டும் என்றும், தானமும் தவமும் செய்தல் வேண்டும் என்றும், கல்வியும்  ஞானமும் வேண்டும் என்றும்,இவைகள் பெற்றுவிட்டால் வானவர் நாடு என்ற யோகவீடு திறக்கும் என்பார்.   
                உடல் தகுதி, உள்ள தகுதி, உள்ளத்தின் கண் வீற்றிருக்கும் அறிவு தகுதி, இவைகளே ஒரு யோகியை உருவாக்கும். யோகா தந்திரம் தந்த திருமூலரும் இக்கருத்தை ஒட்டியே நூல் தந்துள்ளார். எனினும், உடல் தகுதியை அவ்வையாரை போல் சொல்லவில்லை. இதை கடந்து மனிதன் கடைபிடிக்கவேண்டிய வழிகளையும் செயல் முறைகளையும்  விளக்கமாக  மூவாயிரம் பாடல் வழியே பிரித்து தந்துள்ளார்.        
      திருவள்ளுவரும் தனது திருக்குறளில் வாழ்வுக்கு இலக்கணம் தரும் விதமாக இறைவனை அடைவது, பிறவி கடலை கடப்பது, புலால் மறந்து இருப்பது, என யோகத்தினை வலியுறுத்துகிறார்.
        யோகா என்பது உடல் பயிற்சியாக கருதக்கூடாது, அது உடலை கொண்டு இறைவனை அடைவது.  
௧, உடல் தகுதியே முதல் அடிப்படை தேவை,
  உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும், பிறப்பிலேயே பிழை இருப்பின் அதை நீங்க வேண்டும், மூலாதாரத்திலிருந்து உச்சி வரை செல்லும் நாடி ஒழுக்கமுடன் கூனனாக பிறந்த அன்பு உள்ளத்திற்கு இருக்காது. எனவேதான், கூன் இன்றி இருப்பது அவசியம், ஒழுக்கமுடன் பிறந்தவர்கள் தனது முதுகை நேராக வைத்துக்கொள்வது அவசியம்,  அதற்கான பயிற்சிகளை யோகா ஆசனம் என்பர்.
 உடலை ஆரோக்யமாக வைக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும், இங்கே சிலர் தவறாக எண்ணக்கூடும், சைவம், அசைவம் என்று இரண்டுவகை உணவு இருப்பதால் சைவம் தான் சிறந்தது, அல்லது அசைவம் தான் சிறந்தது என்பதில்லை, அதிகம் புளித்த தயிரோ, இரவு  வைத்த இறைச்சியோ, அதாவது கேட்டுபோகாத உணவை உட்கொள்ள வேண்டும்.              
   உடலை விட அறிவாளி யாரும் கிடையாது, அச்சம் கொள்ள தேவை இல்லை. அசைவம் உண்பதால் கடவுளை அறியமுடியாது என்று யாராவது கூறி இருந்தால் அது அவரது புரிதல். திருமூலரும் தனது இருநூற்று எழுபத்து   இரண்டாம் பாடலில், இறைச்சி அறுத்து பொன் போல் வறுத்து அன்போடு அகம் குழைவாருக்கு அல்லாமல் என்போல் மணியை எய்த  ஒண்ணாது. 
  என்பே விறகா இறைச்சி அறித்திட்டுப் 
  பொன்போல் கனலில் பொரிய வறுப்பினும் 
  அன்போடு உருகி அகம் குழைவாருக்கு அன்றி 
  என்போல் மணியினை எய்த ஒண்ணாதே.
 என்று கூறியுள்ளதற்கு காரணம் இறைச்சி ஆன்மிகத்திற்கு தடை இல்லை என்று வலியுறுத்தவே, புலால் என்பது புலன்களின் பன்மை பெயர்,  புலன்களின் மேல் இச்சை கொண்டு அது காட்டும் வழி செல்பவர் மல்லாக தள்ளி மறித்து வைக்கப்படுவர். இதை இறைச்சி உண்பவர் என்று அர்த்தம் கொள்ளகூடாது, அப்படி அர்த்தம் கொண்டால் எத்தனையோ அன்பு உள்ளங்கள் இறைச்சி உண்ணாமல் இருக்கிறார்கள், அவர்களை மல்லாக தள்ளி புதைக்காமல் இல்லை.இதற்கான திருமந்திர பாடல் 
  பொல்லாப் புலாலை நுகரும் புலையரை 
  எல்லாருங் காண இயமன்தன் தூதுவன் 
  செல்லகப் பற்றித் தீவாய் நரகத்தின் 
  மல்லாக்க தள்ளி மறித்து வைப்பாரே -௧௯௯
புலன்களை நுகருவதே ஆன்மிக தடை புலன்களை தன்வசம் செய்வதே யோகத்திற்கு வழி, இதை வலியுறித்தியே , திருவள்ளுவரும் 
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி 
எல்லா உயிரும் தொழும்.
 கொள்ளாமலும்,புலாலை மறுத்தும் இருந்தால் அதாவது தவநிலையில் இருந்தால் எல்லா உயிரும் தொழும்...     
உடலை நன்கு பேணுவதால் உடலுக்குள் இருக்கும் உத்தமனை  காணலாம்.
௨, உள்ளத்தகுதி 
 உள்ளம் என்பது மனதை குறிப்பது, மனம் செம்மை செய்வது மனிதனின் கடமை, மனதை பலதரப்பட்ட கருத்துக்களால் நாம் நிரப்புவது இயல்பானது. அதை விடுத்து மனதை எண்ணங்கள் அற்ற நிலைக்கு உயர்த்தவேண்டும். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை 
       என்ற குறளுக்கு இணங்க எல்லாரும் வாழ்வதற்கு இடம் அளித்து தமது திறமையால் அடுத்தவர் இன்புறும் வழியை காட்டி, தனது வேலைகளை சரியாக செய்தல் வேண்டும், உள்ளத்தை செம்மை செய்வதற்கு அதாவது  மனதை எண்ணமற்ற தன்மைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
௩, அறிவு தகுதி 
 அனைத்திற்கும் ஆதாரம் உண்டு, அதை அடைவது என் பணி, என்ற நோக்கில் உள்ள தூய்மையுடன் இருப்பதே தியானம்,அதனால் அடைவது யோகம்....
   எல்லாரும் எல்லாமும் பெற்று இன்பமாய் வாழ இறைமை அருள்வதாக ..    

Wednesday, July 06, 2011

பஞ்சாட்சரம்

 மதம் மறப்போம்!                   மனிதம் வளர்ப்போம்!
பஞ்சாட்சரம்  
அன்பு உள்ளங்களே!  
   இறை துணையுடன், பஞ்சாட்சரம் என்பது ஐந்து அட்சாரமகிய நமசிவய என்பதை குறிக்கும். தமிழ் கூறும் நல் உலகம் அனேக நன்மைகள் தரும் பலவிதமான சித்தாத்தங்களை மனிதர்களுக்கு தந்து தனது தனித்தன்மையை தக்கவைத்துள்ளது.  
     எழுத்துக்களை அட்சரம் என்பது வழுக்கு, அப்படி உள்ள எழுத்துகளில் இந்த ஐந்து எழுத்துக்கள் மட்டும் சிறப்பானதாக எடுத்து தமிழ் முன்னோர்கள் கடவுளை அறியவும், மனதை ஒரு நிலைப்படுத்தவும், தன்னிலை வளர்த்துக்கொள்ளவும் பயன்படுத்தினார்கள்.
     நாம் சிவம் என்பதை குறிக்கும் விதமாக நமசிவய என்றார்கள். காரணம் நாம் ஐந்து பொருள்களின் தொகுப்பு. ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு பொருள் ந என்பது நீரை, ம என்பது மண்ணை, சி என்பது நெருப்பை, வ என்பது காற்றை, யா என்பது வானை குறிக்க அடையாளமாக வைத்து பயன்படுத்தினார்கள்.
   உலகமும் இந்த ஐந்து பொருள்களை கொண்டே இருக்கிறது . அணைத்து உயிர்களும் இந்த ஐந்தின் தொகுப்பாக உள்ளது. சிவத்தில் நாமும் ஒருவர் என்பது உணர்த்த சிவயநம என்றும் உரைப்பர்.   
   உலக தோற்றம் வெற்றிடத்திலிருந்து அதாவது யா என்ற வானத்திலிருந்து. எனவே தன் யா இருக்க பயம் ஏன்? என்று கூறுவார்கள்.     
    யாவை தவிர்த்து மற்ற நான்கும் பூதம் என்பார்கள், சிலர் ஐந்தையும் பூதங்கள் என்றே அழைக்கிறார்கள். பூதம் என்றால் பெரியது. அதற்குமேல் எதுவும் இல்லை என்று பொருள்.  கிணறு வெட்ட பூதம் வந்த கதை - மண்ணை எடுத்தால் தண்ணீர் வரும், கற்று அவ்விடத்தை அடைத்துக்கொள்ளும், வெப்பம் தோன்றும், வெற்றிடம் இருக்காது, மண்ணாகிய பூதத்தை தோண்டினால் ஏனைய மூன்று பூதங்கள் தோன்றும். வெற்றிடமாகிய ஒன்று இல்லாமலேயே போகும்.                  
           மண்ணுக்குள் நான்கு பூதங்களும், தண்ணீருக்குள் மூன்று பூதங்களும், நெருப்புக்குள் இரண்டு பூதங்களும், காற்றுக்குள் ஒரு பூதமும் அடக்கமாக உள்ளது.
  அன்பு  உள்ளமே இங்குதான் சூட்சமம் உள்ளது. காற்றுக்குள் இருப்பது பூதமல்ல கடவுள். ஆனால் அதை அறிவது அவ்வளவு எளிதல்ல காரணம் அதை வெற்றிடம் என்றுதான் மனித உணர்வு அறியும். அதை அறிவதற்கு என்று யோக வழிகளை கண்டு கடவுளை அடைந்தவர்கள் சொற்பமாகவே இருக்கிறார்கள்.
        மண்ணுக்குள் எப்படி நான்கு பூதமோ அப்படியே நமது உடலுக்குள் நான்கும், 
அந்த நான்கு பூதத்திற்கு  நன்றியுடன் இருந்து ஐந்தாவதாக இருக்கும் கடவுளை அறிவதற்கு இந்த பஞ்சாட்சரம் உதவுகிறது.   
    கடவுளை அறிவதற்கு மனம் எண்ணமற்ற நிலையை அடைய வேண்டும். மனம் எண்ணமற்ற நிலை அடைய முதலில் பல எண்ணைகள் இல்லாமல் இருக்க பழக வேண்டும் ஆகவே, மனதை ஒரு நிலை படுத்த இந்த பஞ்சாட்சரத்தை மனதுக்குள் உச்சரித்துக்கொண்டே இருந்தார்கள். இருக்கவும் சொன்னார்கள்.
     பின்னே வந்த மனிதர்கள் அதன் ஆழம் புரியாமல், அதனைக்கொண்டு வியாபார நோக்கில் எழுத்துக்களை மாற்றி அமைத்து புதுப்புது விளக்கங்களை தந்து மனிதர்களை தடம் மாற்றி விட்டார்கள்.
     உதரணமாக, வசியம் செய்வதற்கு வயநமசி, தொல்லைகள் அழிய யநமசிவ, நாசம் செய்வதற்கு மசிவயந, என்று மனதிற்குள் உச்சரிக்க சொன்னார்கள்.
      மேலும், பஞ்சாட்சரம் பெற்றிய தகவல்.
நமது ஐவிரல்களும் இந்த ஐந்து எழுத்துக்கு என்று முறையே ந சிறுவிரளுக்கும், ம மோதிர விரலுக்கும், யா நாடு விரலுக்கும், வ ஆள் கட்டி விரலுக்கும், சி கட்டை விரலுக்கும், என்று புரிந்து அவைகளின் மூலம் நமது உடலின் தட்பவெப்ப நிலையை சரிசெய்வதற்கு உத்திகளை தந்துள்ளார்கள்.
  மேலும் தகவல்களுக்கு அடியேனை அணுகவும்......       
   
                

Thursday, June 30, 2011

கடவுளும் தெய்வமும்

கடவுளும் தெய்வமும்
மதம் மறப்போம்!                                            மனிதம் வளர்ப்போம்!   
அன்பு உள்ளமே!
                இங்கே கடவுளும் தெய்வமும் வேறு என்பதையும் அதன் ஆழமான பொருளையும் அறிய உதவும் வகையில் இதை எழுதியுள்ளோம்.
               கடவுள் என்பது கடத்தில் இருப்பது. தெய்வம் என்பது சிறப்பாக இருப்பதால் அடையும் தன்மை. எனவே தான் வள்ளுவர்
            வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்னுரையும் 
            தெய்வத்துள் வைக்கப்படும். திருக்குறள்-50
என்று இபுவிதனில் சிறப்பான வாழ்வை வாழ்பவர்களை தெய்வம் என்று உரைக்கின்றார்.அதே சமயத்தில் தெய்வீக தன்மை பெற்றவரை விட தனது கணவனே சிறந்தவன் என்று வாழும் பெண்ணையே விரும்பும் பொது பொழியும் மழை போன்றவள் என்கிறார்.அதற்க்கான திருக்குறள் 
             தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் 
             பெய்யனப் பெய்யும் மழை .திருக்குறள்-55 .
            தெய்வம் என்ற சொல் உன்னத சக்தி என்ற பொருள் மருவி  அதுவே உன்னதம் அல்லது முதன்மை என்ற வழக்கு தொடர்கிறது. தெய்வம் என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் LORD என்று அழைக்கப்படுகிறது.கடவுள் என்பது GOD என்று சொல்லல் அழைகப்படுகிறது.உதரணமாக LORD கிருஷ்ணா, LORD MURUGAN ,  LORD JESUS ,
            இக்கருத்தை மேலும் வலியுரத்தவே
              தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் 
              மெய்வறுத்த கூலி தரும்..திருக்குறள் -619 
 இக்குறள்  மேற்கோள்  காட்டபடுகிறது. 
                  தெய்வ வழிபாட்டையே நாம் கடவுள் வழிபாடாக நினைக்கிறோம். மதம் என்பது தெய்வீக சாதனை செய்தவர்களின் புகழ் பரப்பும் தளமாக  இருப்பதால், மதம் சார்ந்த மனிதர்கள் கடவுளை அடையாமல் அந்த மதம் சார்ந்த தெய்வங்களை அடைந்து மற்ற தெய்வங்களை குறை குறி ஓயாத போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.    
                    பலபல தெய்வங்கள் இருப்பது உண்மைதான். ஆயினும்,கடவுள்  என்பது ஒன்று தான். மதங்களை மறந்து கடவுளை அடைந்தால் எல்லாரும் எல்லாமும் பெற்று இன்பமாக வாழலாம். மனிதர்கள் தெய்வங்களை பின்தொடருவதால்  உனது தெய்வம் எனது தெய்வம் என்று பாகுபாடுகள் வளர்ந்து நிம்மதியை தொலைத்தவர்களாக இருக்க நேரிடும்.
          அறிவும், ஆற்றலும் கொண்ட மனிதர்கள் தெய்வத்தின் பின்னே சொல்வதால் வேதனையும், வன்முறைகளும் அரங்கேறுகின்றது. மாறாக, தனக்குள் உறையும் கடவுளை அறிந்தால்,  தானும் இன்புற்று பிறரும் இன்புற வழிகள் பல பிறக்கும்.....       

Monday, April 25, 2011

குருகுரு  
அன்பு உள்ளமே!
         இருட்டறையில் ஏற்றப்படும் மெழுகுவர்த்தி போன்றது குரு.... குரு ஒரு மனிதனாக அல்லது ஏனைய மற்ற பொருளாக இருக்கலாம். நவீன காலத்தில் குரு என்பவர் தன்னை தனது நிலையை உயர்வான அலங்காரத்தால் அலங்கரித்து கொண்டு மக்களை மாறாத மயக்கத்தில் வைப்பவரகவே இருக்கிறார்கள்.
     மனிதனுக்கு மட்டுமே குரு அவசியம். காரணம், மனிதன் இயல்பான அறிவுடன் அணைத்து செயல்களையும் செய்ய முடிந்தவன் இல்லை. மேலும் அவனால் அடுத்தவருடன் உறவாட மொழி மற்றும் சடுங்கு முறைகள் பல நடைமுறை செய்யப்பட்டு உள்ளது .
     ஒருவரின் அறியாமையை  போக்கும் ஒருவரே குரு. அதே சமயத்தில் அவருக்கு எல்லாம் தெரியும் என்பது சாத்தியம் இல்லை. பலதரப்பட்ட கோணமுடன் பல வகைகளில் வாழ்தலின் அம்சம் இருப்பதால் எல்லா வகைகளிலும் ஒருவர் ஒருவருக்கு உதவ முடியாது. குருவும் எதாவது ஒரு வகையில் அறியாமையுடன் இருக்க வைப்புகள் அதிகம்.
       நமக்கு எதைக் குறித்து போதிய தெளிவு இல்லையோ அதை குறித்து நமக்கு போதிக்கும் ஒருவர் குரு. ஆனால் அதை குறித்த அரை குறை அறிவுடன் அவர் இருக்கிறார் என்றால் நாமும் போதிய தெளிவை அவரால் அடைய முடிவது இல்லை. எனவே,உண்மையான அறிவுத் தெளிவு பெற்ற ஒருவரை குருவாக அடைவது அவசியம்.      
       தனது புரிதலை அடுத்தவருக்கு உரிமையாக்கி தருபவரே குரு.  குரு என்பது ஒரு வேடமோ, சடங்கோ,அலங்காரமோ, போதனையோ, விளம்பரமோ இல்லை.
        எல்லாம் அறிந்தவர் யாரும் இல்லை, எதுவும் அறியாதவர் யாரும் இல்லை. எனவே, குரு அனைத்தும் அறிந்தவராகவோ, சிடர் எதுவும் அறியாதவரகவோ இருப்பதற்கு வாய்ப்பு இல்லை.   
              இன்றைய உலகில் பலதரப்பட்ட துறைகள் வந்தவண்ணம் உள்ளது. புதிய கண்டுபிடுப்புகள், புதிய கருவிகள் என்று நித்தம் புதுமைகள் பிறந்தவண்ணம் உள்ளன. ஆனால் அவைகள் மட்டும் நிறைவான வாழ்வை தர முடியாது. எனவே உலக இயக்கத்திற்கு அடிப்படையான காரணம் அறிந்து இன்புறுவது மனிதனுக்கு நல்லது.         
            அவ்வகையில் தன்னை அறிந்து தனக்கு மூலம் எது என்பதை அறிந்து அதை அறியும் கலை அறிந்து போதிக்கும் ஒருவரை குரு என்பது சரியானதாக  இருக்கும். 


Saturday, January 29, 2011

காமம்

மதம் மறப்போம்!                                        மனிதம் வளர்ப்போம்!  
                                      

காமம் 
அன்பு உள்ளங்களே! 
               இறைவுணர்வுடன் எழுதுவது.....

                        காமம் என்பது இன்றிய சுழலில் பாலுணர்வு என்று மட்டுமே உணரப்படுகிறது. காமம் என்பது ஆசை என்றுதான் பொருள் படுகின்றது. ஆசைகளை தீர்க்கும் ஒன்றினை காமதேனு என்றும் காமம் கடந்தவரே ஞானி என்றும் அழைப்பதை கொண்டு அறியலாம். மனதில் தோன்றும் ஆசைகளில் பாலுணர்வே அதிகம் இருப்பதால் காமம் என்பது பால் சார்ந்த ஒன்றாக குறிக்கபடுகின்றது. நாமும் அத்தகைய பொருளாகவே கொள்வோம்.


                       இயற்கை அல்லது கடவுள் இந்த பூமி பந்தில் எண்ணிக்கை அற்ற உயிர்களை உருவாக்கி தன் இனத்தை வளர்ப்பதை தனது தொழிலாகக் கடை பிடிக்கவே காமம் (செக்ஸ்) என்ற ஒன்றை பரிசாக தந்துள்ளது. 


                       மனிதனின் அணுகுமுறை மற்ற உயிர்களைப்போல் அல்லாமல் மாறுபட்டு இருக்கிறது. மனிதர்களுக்குலேயும் பலவகையான கருத்தோட்டம் நிலவுகின்றது. சிந்திக்க தெரிந்த விலங்காக இருப்பதால் காமத்தை எப்படி அணுகுவது என்று முன்யோசனையுடன் செயல்படுகிறான். 


                      ஆணும் பெண்ணுமாக இணைவது இனவிருத்தி செய்வது பொதுவாக இருப்பினும் மனிதன் தனது அறிவால் பலதரப்பட்ட குழுவாக இருப்பதால் ஆண் பெண் உறவுக்கு சடங்கு முறைகளை வகுத்துள்ளான்.


                     ஒவ்வொரு  உயிரும் பருவம் அடைந்ததும் காமத்திற்கான உடல் உந்துதல் ஏற்பட்டு தனது தேவையை நிறைவேற்ற துடிக்கின்றது. மனித உயிர் மட்டும் தனது தேவையை தானே அடக்கவும், தகுதி பார்த்து உறவு கொள்ளவும் செய்கின்றது.


                      இத்தருணத்தில் மனிதனுக்கு ஏற்படும் உணர்வை காதல் என்று அழைக்கின்றோம். ஒருவனுக்கு ஒருத்தி அல்லது ஒருத்திக்கு ஒருவன் என்ற உயர் பண்புள்ளவரின் காமம் புனிதமானதாகவும், வெறும் உடல் தேவைக்கு மட்டுமே காமம் இருந்தால் அதை புனிதமற்றதாகவும் கருதுகின்றோம்.  


                   புனிதமோ,புனிதமற்றதோ எல்லா உயிருக்கும் காமம் அரும்புவது இயல்பானது. பிறப்பால் எதாவது குறை என்றால் காமம் அரும்புவது தடைபெருகின்றது. காமம் கடவுளை அடைவதற்கு தடை என்பது அறியாமை.


                   காமத்தை அடக்குவதால் தன்னை புனதமானவன் என்று கட்ட முற்படுவதற்கு காரணம் அந்த நபரின் ஆணவம். இறைகையை விட மேலான அறிவு எனக்கு என்று நினைப்பதுவே இத்தகைய  மடத்தனம் செய்வதற்கு ஆதாரமாக இருக்கிறது. 
      
                 காமம் அதன் இயல்பில் அழகானது. அதற்கு தடை செய்தாலும் தனக்குள் உந்துதல் ஏற்பட்டு வெளியாக வேண்டிய விந்து ,சுநிதம்,வெளியே வந்துவிடும்.  


                உண்மையை தேடுவதற்கு காமம் தடை என்று எண்ணி அதனுடன் போரடி இரண்டும் அற்ற நிலையை அடைவதால் தானும் நிறைவடையாமல் இயற்கையையும் அவமதிக்கிறோம் என்ற எண்ணம் வளர வேண்டும். 


கதை - ஒன்று .

புனித யாத்திரை 


            அவள் அவளது தனி அறையில், மனதுடன் அர்த்தமற்ற உரையாடலில் முழ்கியவலாய் உடலால் தனித்து இருந்தால்...


           சரியாக மணி என்ன என்று சொல்லமுடியாத சுழல், விளக்கு அணைக்கப்பட்டு இருந்தது. திடிரென வளமான கை தனது வாயை முடியாதும் அவளது மனப் போராட்டம் நின்று வாயை திறக்க முயற்சி செய்தாள்.        
  
          அதன் கைகளில் ஏதோ மயக்க மருந்து மெல்ல தனது நினைவை அவள் இழந்தாள்.  


          உறக்கமா மயக்கமா தெளிந்தது எது என்று அவளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. உடல் வலி, மனசஞ்சலம்     
  
           
   

Monday, January 10, 2011

சிவவாக்கியம்

மதம் மறப்போம்!                                                  மனிதம் வளர்ப்போம்!
               சிவவாக்கியம்  
அன்பு உள்ளங்களே! 
                       சிவவாக்கியம் என்பது கடவுள் உணர்ந்த மனிதர் ஒருவரால் எழுதப்பட்டது. அவர் மொழி ஜாதி என்ற வரைமுறைகளை கடந்து வாழ்ந்த ஒரு மனிதனாக இருந்திருக்கவேண்டும். அவரை அவரது  நூல் கொண்டு மட்டுமே அறியமுடிகின்றது. அவரது முயற்சி  தனி மனித முயற்சியாக இருந்திருக்கிறது. அவரது படைப்பு எனது இறை தேடலுக்கு பெரிதும் உதவியாக இருந்ததால் அவரை எனது குருவாக நினைக்கிறேன்.
                      சிவத்தை அறியச் செய்யும் வாக்கியம் என்பதால் அவரே தனது முதல் பாடலில் சொல்லுவேன் சிவவாக்கியம் என்று தனது நூலுக்கு பெயர்  வைத்துள்ளார்.
   அரியதோர் நமசிவாயம் ஆதியந்தம் ஆனதும் 
 ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
சுரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்  
தோஷ தோஷ பாவாமாயை தூர தூர ஓடவே 
கரியதோர் முகதையுற்ற கற்பகத்தை கைதொழக் 
கலைகள் நூற்கண்  ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே 
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெல்லாம் 
பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே. 


                 முதல் பாடலே முழு கருத்திற்கும் ஆதாரமாக அமைவது நல்ல இலக்கியத்திற்கு அழகு. அவ்வகையில் இந்த பாடல் அமைந்து உள்ளது. ஆனால், சரியான விளக்கம் தெரியாத குருட்டு மனிதர்கள் பலதரப்பட்ட கருத்துக்களை முன் மொழிகிறார்கள். நமசிவய என்பது பஞ்ச பூதங்களை குறிக்கும் அடையாள குறிகள். அந்த ஐந்து பூதங்கள் முதலும் முடிவுமாக இருக்கிறது. அதை ஓதிய மனிதர்கள் தேவர்களாக இருந்தார்கள். ம் என்ற நாத ஓசையுடன் நான் இணைந்து சொல்லுவேன் சிவவாக்கியம். இதனால் நமக்கு ஏற்படும் துக்கம் விலகும் என்றும், உபதேசம் பெற்ற மனிதன் கலைகளை அதன் வழியே அடைவான் என்றும் விளக்கி உபதேசம் என்ப என்ன?, இறைவனை அடையே செய்யவேண்டிய பயிற்சி முறைகள் என்ன? என்பதை பின்வரும் பாடல்களின் வழியே நமக்கு உணர்த்துகின்றார்.     
   
சிவவாக்கியம் படிக்க கிழ் காணும் முகவரியை அழுத்தவும் ....
     http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0269.html