சாதகம் (ஜாதகம்)
சாதகம் |
வணக்கம் அன்புள்ளங்களே !
உலகம்
என்பது பலவிதமான உயிர்களால் ஆனது. இதில் எண்ணிக்கையற்ற உயிர்கள் தோன்றி
மறைந்துள்ளது. ஆனால் மனிதன் மட்டுமே இயற்கையின் சூழலை அறிந்து தனக்கு அதை சாதகமாக
மாற்றிக்கொண்டு சிறப்புடன் வாழ்கிறான்.
இயற்கையை
புரிந்துக் கொண்டதன் அடையாளமே சாதகம். இதில் சூரியனை மையமாக வைத்து சுற்றும்
கோள்கள், மற்றும் துணைக் கோள்களைக் கொண்டு காலத்தையும், அதன்
மாற்றத்தையும் மட்டுமில்லாது அது மனிதனின் மனதை எப்படி பாதிக்கிறது என்பதையும்
ஆராய்ந்து கூறப்பட்டுள்ளது.
சூரியனை பூமி மற்றும் ஏனைய
கிரகங்கள் சுற்றுவதை அறிந்து வருடத்தையும், சந்திரனின்
சுழற்ச்சியை அறிந்து நாட்களையும் கணக்கிட்டு வந்துள்ளார்கள்.
சந்திரனின் முழுமையான சுற்றே மாதமாக கணக்கிட்டு வழக்கத்தில் இருந்தது. கரு
முழுமையடைய பத்து மாதம் என்றது இந்த சந்திர மாதத்தையே சாரும். எனவேதான் 280
நாட்களில் குழந்தை பிறக்கிறது.
சூரியனை மையமாக கொண்ட சூரிய குடும்பமே ஒட்டு
மொத்தமாக நகர்வதை அறிந்து அது நகரும்பொழுது எற்படும் வழி தடத்தை கணக்கில் கொண்டு
அடையாளப்படுத்த பரவெளியில் உள்ள நட்சத்திரங்களை கைக்கொண்டார்கள். அப்படி அடையாளத்திற்கு
எடுத்துக்கொண்டது 27. அவை. 1, அசுபதி, 2, பரணி, 3, கார்த்திகை, 4, ரோகினி, 5,
மிருகசிரிடம், 6, திருவாதிரை, 7, புணர்புசம், 8, புசம், 9, ஆயில்யம், 10, மகம்,
11, புரம், 12, உத்திரம், 13, அஸ்தம், 14, சித்திரை, 15, சுவாதி, 16, விசாகம், 17,
அனுசம், 18, கேட்டை, 19, மூலம், 20, பூராடம், 21, உத்திராடம், 22, திருவோணம், 23,
அவிட்டம், 24, சதயம், 25, புரட்டாதி, 26, உத்திரட்டாதி, 27, ரேவதி. இவைகளைக்
கடந்து இருக்கும் நட்சத்திரம் ‘அபசித்’ என்று அழைக்கப் படுகிறது.
நட்சத்திரங்கள் 27 உடன் கோள்களை உள்ளடக்கி
அனைத்தையும் பன்னிரென்டு இராசிக் கட்டத்தில் அழகாக வரையறுத்துள்ளார்கள். ஓன்பது
கிரகங்களை நான்கு இராசிக்குள் அடக்கி முன்றுமுறை நான்கு இராசிகள் வரும்படி
அமைத்துள்ளார்கள். ஒவ்வொரு கிரகத்திற்கும் முன்று நட்சத்திரம் வீதம் ஒன்பது
கிரகத்திற்கு 27 நட்சத்திரத்தை வரையறுத்துள்ளார்கள்.
மனித மனதை புறச்சூழல்கள் மாற்றமுறச்
செய்கிறது.
No comments:
Post a Comment
Thank you for your valid opinion....