Thursday, July 14, 2011

இயமம்

கடவுள் அறிய அடிப்படை தேவைகள்
(இயமம்)
மதம் மறப்போம்!                                               மனிதம் வளர்ப்போம்!
அன்புள்ளங்களே!
            மனிதர்களாகிய நாம் கடவுளை அறிய முடியும்,அப்படி அறிந்தவர்கள் நமக்கு அறிய நூல்களை தந்துள்ளார்கள், அதில் திருமந்திரம், பதஞ்சலி யோகா சூத்திரம், போன்ற நூல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை, கடவுளை அடைவதற்கு யோகம் என்று பெயர் தந்துள்ளார்கள்.யோகம் பற்றிய தகவல்கள் கிழே உள்ளது. 
              இங்கே,முதல் நிலையாக கருதும் இயமம் பற்றி பார்போம்.நாம் வெறும் நூல் அறிவோடு இல்லாமல்,அதை அனுபவமாக மாற்றுவோம்,அடியேன் யோகா அனுபவன் என்பதால் எனது சுயம் எப்படி என்னால் அறியப்பட்டதோ அப்படி நீங்களும் அறிய முடியும் என்ற வகையில் அடிப்படை தேவைகளை பட்டியல் இடுகிறேன்...
                ஒரு யோகா சாதனை செய்தவன் யோகி,அவனை ஞானி என்பது தமிழ் மரபு, முன்னோர் தமிழ் நூல்கள்  பெரும் பகுதி ஞானிகளால்  செயப்பட்டது. அவ்வகையில் அவ்வையார் மனிதன் கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் வேண்டும் என்றும், தானமும் தவமும் செய்தல் வேண்டும் என்றும், கல்வியும்  ஞானமும் வேண்டும் என்றும்,இவைகள் பெற்றுவிட்டால் வானவர் நாடு என்ற யோகவீடு திறக்கும் என்பார்.   
                உடல் தகுதி, உள்ள தகுதி, உள்ளத்தின் கண் வீற்றிருக்கும் அறிவு தகுதி, இவைகளே ஒரு யோகியை உருவாக்கும். யோகா தந்திரம் தந்த திருமூலரும் இக்கருத்தை ஒட்டியே நூல் தந்துள்ளார். எனினும், உடல் தகுதியை அவ்வையாரை போல் சொல்லவில்லை. இதை கடந்து மனிதன் கடைபிடிக்கவேண்டிய வழிகளையும் செயல் முறைகளையும்  விளக்கமாக  மூவாயிரம் பாடல் வழியே பிரித்து தந்துள்ளார்.        
      திருவள்ளுவரும் தனது திருக்குறளில் வாழ்வுக்கு இலக்கணம் தரும் விதமாக இறைவனை அடைவது, பிறவி கடலை கடப்பது, புலால் மறந்து இருப்பது, என யோகத்தினை வலியுறுத்துகிறார்.
        யோகா என்பது உடல் பயிற்சியாக கருதக்கூடாது, அது உடலை கொண்டு இறைவனை அடைவது.  
௧, உடல் தகுதியே முதல் அடிப்படை தேவை,
  உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும், பிறப்பிலேயே பிழை இருப்பின் அதை நீங்க வேண்டும், மூலாதாரத்திலிருந்து உச்சி வரை செல்லும் நாடி ஒழுக்கமுடன் கூனனாக பிறந்த அன்பு உள்ளத்திற்கு இருக்காது. எனவேதான், கூன் இன்றி இருப்பது அவசியம், ஒழுக்கமுடன் பிறந்தவர்கள் தனது முதுகை நேராக வைத்துக்கொள்வது அவசியம்,  அதற்கான பயிற்சிகளை யோகா ஆசனம் என்பர்.
 உடலை ஆரோக்யமாக வைக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும், இங்கே சிலர் தவறாக எண்ணக்கூடும், சைவம், அசைவம் என்று இரண்டுவகை உணவு இருப்பதால் சைவம் தான் சிறந்தது, அல்லது அசைவம் தான் சிறந்தது என்பதில்லை, அதிகம் புளித்த தயிரோ, இரவு  வைத்த இறைச்சியோ, அதாவது கேட்டுபோகாத உணவை உட்கொள்ள வேண்டும்.              
   உடலை விட அறிவாளி யாரும் கிடையாது, அச்சம் கொள்ள தேவை இல்லை. அசைவம் உண்பதால் கடவுளை அறியமுடியாது என்று யாராவது கூறி இருந்தால் அது அவரது புரிதல். திருமூலரும் தனது இருநூற்று எழுபத்து   இரண்டாம் பாடலில், இறைச்சி அறுத்து பொன் போல் வறுத்து அன்போடு அகம் குழைவாருக்கு அல்லாமல் என்போல் மணியை எய்த  ஒண்ணாது. 
  என்பே விறகா இறைச்சி அறித்திட்டுப் 
  பொன்போல் கனலில் பொரிய வறுப்பினும் 
  அன்போடு உருகி அகம் குழைவாருக்கு அன்றி 
  என்போல் மணியினை எய்த ஒண்ணாதே.
 என்று கூறியுள்ளதற்கு காரணம் இறைச்சி ஆன்மிகத்திற்கு தடை இல்லை என்று வலியுறுத்தவே, புலால் என்பது புலன்களின் பன்மை பெயர்,  புலன்களின் மேல் இச்சை கொண்டு அது காட்டும் வழி செல்பவர் மல்லாக தள்ளி மறித்து வைக்கப்படுவர். இதை இறைச்சி உண்பவர் என்று அர்த்தம் கொள்ளகூடாது, அப்படி அர்த்தம் கொண்டால் எத்தனையோ அன்பு உள்ளங்கள் இறைச்சி உண்ணாமல் இருக்கிறார்கள், அவர்களை மல்லாக தள்ளி புதைக்காமல் இல்லை.இதற்கான திருமந்திர பாடல் 
  பொல்லாப் புலாலை நுகரும் புலையரை 
  எல்லாருங் காண இயமன்தன் தூதுவன் 
  செல்லகப் பற்றித் தீவாய் நரகத்தின் 
  மல்லாக்க தள்ளி மறித்து வைப்பாரே -௧௯௯
புலன்களை நுகருவதே ஆன்மிக தடை புலன்களை தன்வசம் செய்வதே யோகத்திற்கு வழி, இதை வலியுறித்தியே , திருவள்ளுவரும் 
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி 
எல்லா உயிரும் தொழும்.
 கொள்ளாமலும்,புலாலை மறுத்தும் இருந்தால் அதாவது தவநிலையில் இருந்தால் எல்லா உயிரும் தொழும்...     
உடலை நன்கு பேணுவதால் உடலுக்குள் இருக்கும் உத்தமனை  காணலாம்.
௨, உள்ளத்தகுதி 
 உள்ளம் என்பது மனதை குறிப்பது, மனம் செம்மை செய்வது மனிதனின் கடமை, மனதை பலதரப்பட்ட கருத்துக்களால் நாம் நிரப்புவது இயல்பானது. அதை விடுத்து மனதை எண்ணங்கள் அற்ற நிலைக்கு உயர்த்தவேண்டும். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை 
       என்ற குறளுக்கு இணங்க எல்லாரும் வாழ்வதற்கு இடம் அளித்து தமது திறமையால் அடுத்தவர் இன்புறும் வழியை காட்டி, தனது வேலைகளை சரியாக செய்தல் வேண்டும், உள்ளத்தை செம்மை செய்வதற்கு அதாவது  மனதை எண்ணமற்ற தன்மைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
௩, அறிவு தகுதி 
 அனைத்திற்கும் ஆதாரம் உண்டு, அதை அடைவது என் பணி, என்ற நோக்கில் உள்ள தூய்மையுடன் இருப்பதே தியானம்,அதனால் அடைவது யோகம்....
   எல்லாரும் எல்லாமும் பெற்று இன்பமாய் வாழ இறைமை அருள்வதாக ..    

Wednesday, July 06, 2011

பஞ்சாட்சரம்

 மதம் மறப்போம்!                   மனிதம் வளர்ப்போம்!
பஞ்சாட்சரம்  
அன்பு உள்ளங்களே!  
   இறை துணையுடன், பஞ்சாட்சரம் என்பது ஐந்து அட்சாரமகிய நமசிவய என்பதை குறிக்கும். தமிழ் கூறும் நல் உலகம் அனேக நன்மைகள் தரும் பலவிதமான சித்தாத்தங்களை மனிதர்களுக்கு தந்து தனது தனித்தன்மையை தக்கவைத்துள்ளது.  
     எழுத்துக்களை அட்சரம் என்பது வழுக்கு, அப்படி உள்ள எழுத்துகளில் இந்த ஐந்து எழுத்துக்கள் மட்டும் சிறப்பானதாக எடுத்து தமிழ் முன்னோர்கள் கடவுளை அறியவும், மனதை ஒரு நிலைப்படுத்தவும், தன்னிலை வளர்த்துக்கொள்ளவும் பயன்படுத்தினார்கள்.
     நாம் சிவம் என்பதை குறிக்கும் விதமாக நமசிவய என்றார்கள். காரணம் நாம் ஐந்து பொருள்களின் தொகுப்பு. ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு பொருள் ந என்பது நீரை, ம என்பது மண்ணை, சி என்பது நெருப்பை, வ என்பது காற்றை, யா என்பது வானை குறிக்க அடையாளமாக வைத்து பயன்படுத்தினார்கள்.
   உலகமும் இந்த ஐந்து பொருள்களை கொண்டே இருக்கிறது . அணைத்து உயிர்களும் இந்த ஐந்தின் தொகுப்பாக உள்ளது. சிவத்தில் நாமும் ஒருவர் என்பது உணர்த்த சிவயநம என்றும் உரைப்பர்.   
   உலக தோற்றம் வெற்றிடத்திலிருந்து அதாவது யா என்ற வானத்திலிருந்து. எனவே தன் யா இருக்க பயம் ஏன்? என்று கூறுவார்கள்.     
    யாவை தவிர்த்து மற்ற நான்கும் பூதம் என்பார்கள், சிலர் ஐந்தையும் பூதங்கள் என்றே அழைக்கிறார்கள். பூதம் என்றால் பெரியது. அதற்குமேல் எதுவும் இல்லை என்று பொருள்.  கிணறு வெட்ட பூதம் வந்த கதை - மண்ணை எடுத்தால் தண்ணீர் வரும், கற்று அவ்விடத்தை அடைத்துக்கொள்ளும், வெப்பம் தோன்றும், வெற்றிடம் இருக்காது, மண்ணாகிய பூதத்தை தோண்டினால் ஏனைய மூன்று பூதங்கள் தோன்றும். வெற்றிடமாகிய ஒன்று இல்லாமலேயே போகும்.                  
           மண்ணுக்குள் நான்கு பூதங்களும், தண்ணீருக்குள் மூன்று பூதங்களும், நெருப்புக்குள் இரண்டு பூதங்களும், காற்றுக்குள் ஒரு பூதமும் அடக்கமாக உள்ளது.
  அன்பு  உள்ளமே இங்குதான் சூட்சமம் உள்ளது. காற்றுக்குள் இருப்பது பூதமல்ல கடவுள். ஆனால் அதை அறிவது அவ்வளவு எளிதல்ல காரணம் அதை வெற்றிடம் என்றுதான் மனித உணர்வு அறியும். அதை அறிவதற்கு என்று யோக வழிகளை கண்டு கடவுளை அடைந்தவர்கள் சொற்பமாகவே இருக்கிறார்கள்.
        மண்ணுக்குள் எப்படி நான்கு பூதமோ அப்படியே நமது உடலுக்குள் நான்கும், 
அந்த நான்கு பூதத்திற்கு  நன்றியுடன் இருந்து ஐந்தாவதாக இருக்கும் கடவுளை அறிவதற்கு இந்த பஞ்சாட்சரம் உதவுகிறது.   
    கடவுளை அறிவதற்கு மனம் எண்ணமற்ற நிலையை அடைய வேண்டும். மனம் எண்ணமற்ற நிலை அடைய முதலில் பல எண்ணைகள் இல்லாமல் இருக்க பழக வேண்டும் ஆகவே, மனதை ஒரு நிலை படுத்த இந்த பஞ்சாட்சரத்தை மனதுக்குள் உச்சரித்துக்கொண்டே இருந்தார்கள். இருக்கவும் சொன்னார்கள்.
     பின்னே வந்த மனிதர்கள் அதன் ஆழம் புரியாமல், அதனைக்கொண்டு வியாபார நோக்கில் எழுத்துக்களை மாற்றி அமைத்து புதுப்புது விளக்கங்களை தந்து மனிதர்களை தடம் மாற்றி விட்டார்கள்.
     உதரணமாக, வசியம் செய்வதற்கு வயநமசி, தொல்லைகள் அழிய யநமசிவ, நாசம் செய்வதற்கு மசிவயந, என்று மனதிற்குள் உச்சரிக்க சொன்னார்கள்.
      மேலும், பஞ்சாட்சரம் பெற்றிய தகவல்.
நமது ஐவிரல்களும் இந்த ஐந்து எழுத்துக்கு என்று முறையே ந சிறுவிரளுக்கும், ம மோதிர விரலுக்கும், யா நாடு விரலுக்கும், வ ஆள் கட்டி விரலுக்கும், சி கட்டை விரலுக்கும், என்று புரிந்து அவைகளின் மூலம் நமது உடலின் தட்பவெப்ப நிலையை சரிசெய்வதற்கு உத்திகளை தந்துள்ளார்கள்.
  மேலும் தகவல்களுக்கு அடியேனை அணுகவும்......