யோகம்


யோகம் 

தன்னில் நிலைப்பது  

என்னை நானாக செய்தது 
நானாக 
இருக்கிறது 

சரி தவறு என்பதை போதித்த மனிதர்களை 
சற்றே கடந்து  ஆய்ந்தால் 
நான் 
எனக்காகவே 
படைக்கப்பட்டது 
எனக்கு மட்டுமே 
புரிகிறது 

என்னை நான் சந்தித்த கணத்தையே
யோகமடைந்த கணம்  
என்கிறேன் 

சிவமாய் உள்ளதை 
சவமாய் இருந்து 
உணர்ந்ததால் 
சிவயோகி 

பலருக்கு இதை உணர்த்த 
நினைக்கிறேன் 

அவர்களும் அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவலால் 

தன்னிலையில் தான் இருந்தே 

உன்னிலையை உனக்கு உணர்த்த 

உன்னை அழைக்கிறேன் 

உன்சிறப்புகளை உனக்கே அறிமுகம் செய்கிறேன் 

என்றென்றும் அன்புடன் 

சிவயோகி  யோகம்  
 
 கருணையில் நனைவது 

நான் 
 நானாக இருப்பதின் ரகசியம் 
கருணை 

அப்படித்தான் 
நீ 
நீயாக இருப்பதும்  

நாம் நாமாக இருக்க 
நமது முயற்சியை கடந்த ஒன்று நமக்கு உதவுகிறது 
இதை 
இந்த 
உதவியை கருணை என்பேன் நான் 

உன் முயற்சியின் முடிவு உன்வசம் என்றால் 
உனக்கு ஆணவம் அழிக்க தெரியவில்லை 

அது அப்படித்தான் 

ஆணவம் அழித்தவன் எல்லாம் இறைவசம் 
என்றே தெளிகிறான் 

சற்று நிதானி 

நீ 
நீயாக 
வெளிப்பட்டு 
இருப்பது 
எது ?

அது 
கருணையின் 
மறு வடிவம் 

கருணையில் நனைபவன் 
ஆணவக் குடையை 
ஆதரிப்பது 
இல்லை 

அந்த 
கருணையில் நனைவதே 
யோகம் 

 ____((((()))))_____


யோகம் 
 

இருப்பதில் இருப்பது


ஆதரம் தேடினேன்
அதை
சாதகமாக்கி
அர்த்தமற்ற விதிகள் தந்து அடிமையாக்கினர்
அற்ப மனிதர்கள் 

கேள்விகளை மட்டுமே சுமந்தவனாய்
சுமைகளை அகற்ற
இயலாதவனாய்
பாரத்துடன்
வலிகளுடன்
தேடுவதை தொடர்ந்து திரிந்தேன்

பயிற்சிகள் பல
முயற்சிகள் மட்டும் மூச்சாக
நன்றியுடன் நான்
இருப்பதில் இருப்பதே
யோகம்

நூல் பற்றினேன் சிவவாக்கியம்
நான் பற்றினேன்
கேள்வி சுமை குறைந்து
மெல்ல பறப்பதற்கு சிறகுகள் முளைத்தனே

    சடங்குகள் அற்றவனாய்
மதங்களை தொலைத்தவனாய்
மனதில் எழும் எண்ணைகளை ஆளத் தெரிந்தவனாய்
இருப்பதில் இருப்பதே
யோகம்

மகிழ்ச்சியில் மனம்
உற்சாகத்தில் தினம்
கொண்டாட்டத்தில் நிறைந்தது

அடுத்தவருக்கு அதை பகிர்வதற்காய்
என் தேவைகளை தொலைப்பதற்க்காய்
யோகக்குடில்

உடம்பின் மறு பெயர்
யோகக்குடில்

யோகம் அடைய உதவும் குடில்
யோகக்குடில்

யோகம் அடைய உதவும் உடம்பு
யோகக்குடில்

உடம்பு உள்ள யாவருக்கும்
உண்மையாய்
சொல்லுகிறேன்

இருப்பதில் இருப்பதே
யோகம்

                                                         .................___((((()))))___  
   யோகம் 
கரைந்து விடுவதேநான் 
பூமியிலிருந்து 
வானத்திற்கு 
வீசப்பட்டேன் 


என்னில் 
மேலும் சில துளிகள் 
இன்னும் வீசப்படாமல் 


அனுபவங்கள் 
அறியாமையை 
போக்கின 


அனுபவிப்பவன் 
என்ற 
ஆணவமும் 
அகன்று ......

இருத்தலின் சுகத்தில் 
எப்போதும் 
நிலைக்கப் பட்டேன் 


எனக்குள் நான் மறைவதை 
உணர்த்தும் 
நூல்களைத்தான் 
மறை நூல் 
என்றார்களோ ?


பாவம்
அப்பாவிகள் 
அதை 
அறியமுடியாமல் 
புதிய விளக்கம் தந்து 
அவர்களை 
விளம்பரம் 
செய்துக் கொள்கிறார்கள் .


தண்ணீர் துளிகள் 
மீண்டும் 
தண்ணீரில் 


இருப்பிடம் அறிந்து 
இணைத்து விடல் 


உன்னிலை அறிந்து கரைந்து விடுதலே 
யோகம் 


..........._((((()))))_
யோகம் 
கூடி மகிழ்வதே

காரணம் இல்லாத மகிழ்ச்சி 
கரம் நீட்டி அனைத்துகொண்டது 
தாகமும் தண்ணீரும் 
அருகருகே ......

இல்லை என்பதும் 
இருக்கிறது என்பதும் 
அற்ப வித்தைகள்.
அவைகள்  
பாலைவனத்தில் தாகத்துடன் திரிபவனுக்கு 
கானல் நீர் போன்றது.

கவிதை
 ஒன்றை விளக்க 
சுய கருத்துடன்
அதை இழுந்துவிட்டவன் 
தடுமாறுவதை போலவே 
எல்லாரும் 
எதோ 
அவர்களுக்கு 
புரிந்ததைப் போலவே   
ஏமாறுவதை 
நான் 
மறுதலித்து விட்டேன் 

உண்மையுடன் கலந்து 
உணர்வு 
மேலோங்க 
அதன் 
வற்றாத நாத வெள்ளத்தில் 
அடுத்தவரையும் 
மூழ்கடிக்க 
முயற்சிக்கிறேன் 

என்னை எனக்கு அடையாளம் செய்தது 
உன்னை உனக்கு அறிய செய்யும் 

இரு உடல்கள் இணைந்து 
புது உடலை 
தருவது 
போகம் 

ஒரு உடலுக்கும் 
பிளவுப் பட்ட மனம் 
இணைவது 
யோகம் 

........_((((()))))_