Monday, January 10, 2011

சிவவாக்கியம்

மதம் மறப்போம்!                                                  மனிதம் வளர்ப்போம்!
               சிவவாக்கியம்  
அன்பு உள்ளங்களே! 
                       சிவவாக்கியம் என்பது கடவுள் உணர்ந்த மனிதர் ஒருவரால் எழுதப்பட்டது. அவர் மொழி ஜாதி என்ற வரைமுறைகளை கடந்து வாழ்ந்த ஒரு மனிதனாக இருந்திருக்கவேண்டும். அவரை அவரது  நூல் கொண்டு மட்டுமே அறியமுடிகின்றது. அவரது முயற்சி  தனி மனித முயற்சியாக இருந்திருக்கிறது. அவரது படைப்பு எனது இறை தேடலுக்கு பெரிதும் உதவியாக இருந்ததால் அவரை எனது குருவாக நினைக்கிறேன்.
                      சிவத்தை அறியச் செய்யும் வாக்கியம் என்பதால் அவரே தனது முதல் பாடலில் சொல்லுவேன் சிவவாக்கியம் என்று தனது நூலுக்கு பெயர்  வைத்துள்ளார்.
   அரியதோர் நமசிவாயம் ஆதியந்தம் ஆனதும் 
 ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
சுரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்  
தோஷ தோஷ பாவாமாயை தூர தூர ஓடவே 
கரியதோர் முகதையுற்ற கற்பகத்தை கைதொழக் 
கலைகள் நூற்கண்  ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே 
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெல்லாம் 
பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே. 


                 முதல் பாடலே முழு கருத்திற்கும் ஆதாரமாக அமைவது நல்ல இலக்கியத்திற்கு அழகு. அவ்வகையில் இந்த பாடல் அமைந்து உள்ளது. ஆனால், சரியான விளக்கம் தெரியாத குருட்டு மனிதர்கள் பலதரப்பட்ட கருத்துக்களை முன் மொழிகிறார்கள். நமசிவய என்பது பஞ்ச பூதங்களை குறிக்கும் அடையாள குறிகள். அந்த ஐந்து பூதங்கள் முதலும் முடிவுமாக இருக்கிறது. அதை ஓதிய மனிதர்கள் தேவர்களாக இருந்தார்கள். ம் என்ற நாத ஓசையுடன் நான் இணைந்து சொல்லுவேன் சிவவாக்கியம். இதனால் நமக்கு ஏற்படும் துக்கம் விலகும் என்றும், உபதேசம் பெற்ற மனிதன் கலைகளை அதன் வழியே அடைவான் என்றும் விளக்கி உபதேசம் என்ப என்ன?, இறைவனை அடையே செய்யவேண்டிய பயிற்சி முறைகள் என்ன? என்பதை பின்வரும் பாடல்களின் வழியே நமக்கு உணர்த்துகின்றார்.     
   
சிவவாக்கியம் படிக்க கிழ் காணும் முகவரியை அழுத்தவும் ....
     http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0269.html