Saturday, November 20, 2010

சத்சங்கம்

                                                  சத்சங்கம் 
அன்பு உள்ளமே!
    சக்தி சங்கமிப்பதையே சத்சங்கம் என்று அழைக்கிறோம்.இது சனிக்கிழமைகளில் மாலை ௬ முதல் ௯ வரை நடைபெறும். அடியேன் அனுபவத்தை பகிர்வதும், அனுபவத்திற்கு ஏங்கும் அன்பு உள்ளத்திற்கு உதவுவதும் அனுபவம் பெற்ற மனிதர்களின் நூல்களை விளக்குவதும், என அது அமைந்திருக்கும்.   
    கடவுள் என்பது என்ன?, அதை அடைவது எப்படி?, ஆன்மிகம் என்பது எதை குறிக்கிறது?, இது போன்ற கேள்விகளுக்கு விடை காண உதவும் நோக்கில் பல தலைப்புகளில் பேசப்படுகிறது.
  தற்சமயம் பௌர்ணமி நேரத்திலும் மாலை ௬ முதல் ௯ வரை நடத்த முடிவேடுக்கப்பட்டு உள்ளது .
         முதல் முழுநிலவு சத்சங்கம் ௨௧/௧௧/௨௦௧௦ ஞாயிறு மாலை ௬ முதல் ௯ வரை நடத்த முடிவேடுக்கப்பட்டு உள்ளது.
         சத்சங்கம் ஒலிஒளி திரையை காண இதை சொடுக்கவும்.
   பௌர்ணமி அன்று அடியேன் எழுதி பாடிய பாடல்கள்.
பாடல் -௧ 
விட்டிரு விட்டிரு விட்டிரு விட்டிரு 
ஆணவம் விட்டிரு 
விட்டிரு விட்டிரு விட்டிரு விட்டிரு
கருமம் விட்டிரு
விட்டிரு விட்டிரு விட்டிரு விட்டிரு
மாயை விட்டிரு
உண்மை உன்னை நோக்கி பாய 
உன்னையே  விட்டிரு 
-------விட்டிரு
நான் என்பது ஆணவம் என்று அதனை விட்டிரு 
நாடகம் என்றே நடக்கும் வாழ்வை நன்றே விட்டிரு 
கோயில் இந்த உடம்பு என்று குலத்தை விட்டிரு
கொண்டாட்டம் உனது உரிமை என்று குறையை விட்டிரு
 -------விட்டிரு
கருமம் என்பது கட்டாயம் இல்லை கருத்தாய் விட்டிரு    
மருவும் உலகில் மாற்றம் தொடரும் செயல்கள் விட்டிரு 
தொடரும் வினைகள் தொடராதிருக்க உன்னை விட்டிரு 
படரும் உறவில் மறையாதிருக்க பந்தம் விட்டிரு
-------விட்டிரு
மயக்கம் விட்டிரு தயக்கம் விட்டிரு -௨
மாறும் உலகில் மாற்றம் தொடரும் பொய்யை விட்டிரு -௨
தோற்றம் மாயை துணிவாய் விட்டிரு -௨
கற்றது மாயை கருத்தாய் விட்டிரு -௨

உண்மை உன்னை நோக்கி பாய 
 உன்னையே விட்டிரு 
-------விட்டிரு




பாடல் - ௨ 
இங்கே இங்கே இங்கே இங்கே பரவசம் இங்கே --௨
ஆடி பாடி கொண்டாடு பரவசம் இங்கே--௩


கண்ட கண்ட கண்ட குப்பை தூரம் தள்ளு --௨
தூய உள்ளம் உனக்கே சொந்தம் பரவசம் கொள்ளு --௩ 
----------இங்கே இங்கே
இல்லை இல்லை இல்லை என்ற உளறல் தள்ளு --௨
உனக்குள் உண்டு உண்டு என்று பரவசம் கொள்ளு --௩
----------இங்கே இங்கே
கல்லை மண்ணை மணியை நம்பும் கருத்தை தள்ளு --௨
தொல்லை இல்லா நிலையை அடைய பரவசம் கொள்ளு --௩
----------இங்கே இங்கே
உண்மை உண்மை உண்மை என்று உணர்ந்து கொள்ளு --௨
உன்னில் நியே மகிழ்ந்திருக்க பரவசம் கொள்ளு --௩
----------இங்கே இங்கே


பாடல் - ௩ 
எங்கு தேடுவேன் இறைவா எங்கு தேடுவேன்
எனக்குள்ளே நீ இருந்தால் 
எங்கு தேடுவேன்
                                                                                               --௨
இங்கிருக்கிறாய் இறைவா இங்கிருக்கிறாய்
நான் இருக்கும் இடத்தில் எல்லாம் 
நீ இருக்கிறாய்
                                                                                               --௨ 
காடு மலை தேடினாலும் கண்ணில் பட மாட்டாய்
மாடு மனை வீடு என்று மறையவும் மாட்டாய்---௨
எங்கு தேடுவேன்


இதயம் துடிக்குதே இறைவா இதயம் துடிக்குதே
உன் அருளால் என் இதயம் துடித்து மகிழுதே ---௨ 
எங்கு தேடுவேன்


நான் துயிலும் வேளையிலும் நீ இயக்கினாய் 
துயில் எழுந்து துன்ப வலை நான் பின்னினேன் ---௨
 எங்கு தேடுவேன்


உன் அருளால் என் நிலையை நான் உணர்கிறேன்
உன் நிலையை நான் அடைய எங்கு தேடுவேன்---௨ 
எங்கு தேடுவேன்


இந்த பாடல்களை ஒலிஒளி காண இதை சொடுக்கவும்  

No comments:

Post a Comment

Thank you for your valid opinion....