Thursday, December 23, 2010

கடவுள்

மதம் மறப்போம்!                        மனிதம் வளர்ப்போம்!  
 கடவுள் 
அன்பு உள்ளேமே!
                  கடவுள் என்ற வார்த்தை பல பொருள் தருவதாக இருக்கிறது.கடம் என்றால் உடம்பு என்று பொருள். உள் என்றால் உள்ளே என்று பொருள்.கடவுள் என்றால் கடத்துள் இருக்கும் ஒன்று என்றும் பொருள் கொள்ளலாம்.கடவுள் என்பது எல்லா கடதுள்ளும் இருக்கிறது. எனவே தான் அகிலத்தையும் ஆளும் ஒன்றினை கடவுள் என்று தமிழ் கூறும் நல்லுலகம் அடையாளப்படுத்தி உள்ளது.       
                       கடவுள் என்ற ஒன்றுக்கு ஆண்டவன், கர்த்தர், பரமபிதா, இறைவன் என்று ஆண்பால் பொதுப் பெயரிலும்,மாதா,உலக நாயகி என்று பெண்பால் பொதுப் பெயரிலும்,அழைத்தாலும் உண்மையில் கடவுள் என்பது ஆணோ பெண்ணோ இல்லை. எனவே தான் கடவுள் என்ற வார்த்தை பால் கடந்த தன்மையுடன் இருக்கிறது.       
                        கடவுள் இருக்கிறது என்பதே விவாதப் பொருளாக இன்று மாறிவிடும் அளவிற்கு மதங்கள் செயல்பட்டு இருக்கிறது.நான் இருக்கிறேன் என்றாலே எனக்குள் எதோ ஒன்று இருக்கிறது என்றுதான் அர்த்தம்.நான் இருப்பதற்கு அடிப்படையான காரணமே கடவுள் தான்.
                        கடவுளின் பெயரால் அனேக மதங்களை  மனிதன் ஏற்படுத்தியுள்ளதால் மனிதனுக்கு கடவுள் என்றால் மதமும் அதன் சடங்கு முறைகளும் கவனத்தில் வருகிறது.மனிதன் தன இனத்தை ஒழுக்க நெறிகளுக்கு உட்படுத்த கடவுளின் பெயரால் சில சடங்கு முறைகளை தந்து அதை கடைபிடிக்க கட்டாயப் படித்தியுள்ளன்.
                        மேலும்,கடவுளின் அசல் தன்மையை அறியமேலேயே அதற்கு வடிவம் பல தந்துள்ளான்.எனவேதான் இன்றைய அறிவு சார்ந்த மனிதன் கடவுளை புரிந்துகொள்ள முடிவதில்லை.
                        பொதுவாக மனிதர்கள் அறிவு சார்ந்து இருப்பதில்லை அறிவு சார்ந்த மனிதர்களையே நம்பி  இருக்கிறார்கள். இதன் பொருட்டே கடவுள் மறுப்பாளர்களையோ, அல்லது மதவாதிகளையோ மக்கள் நம்பி பின்தொடர்கிறார்கள்.  
                         உண்மையில் அறிவு முழுமை பெற்ற மனிதன் கடவுளை அறிந்துகொள்ள முடியும். அல்லது முழுமை பெற்ற மனிதன் கடவுளை சரியாக விளக்க முடியும். ஆயினும், தனக்கு தானே அறியாவிடின் சரியான ஒன்றை அறிந்ததாகது. ஆனால், ஒவ்வொரு மனிதனும் தன்னை தனது அறிவை சரி என்றே உணர்கிறான்.       
                          சரியாக கடவுளை உணர்துகொள்ள, கடவுளை உணர்த்துகொண்ட மனிதனின் வழிகாட்டுதலும் சுய முயற்சியும் அவசியம்.
                         கடவுள் உங்களுக்குள் இருக்கும் உன்னதம் நிறைந்த அற்புதம். அதை அனுபவித்துக்கொண்டு இருப்பதும் அதே சமயத்தில் அதை புரிந்துக்கொண்டு ஏற்பதும், மறுப்பதும் உங்களின் தனிப்பட்ட விருப்பம்.        
       

No comments:

Post a Comment

Thank you for your valid opinion....